Posts

Showing posts from February, 2023

சிலைகொள் நாணின் - சீவக சிந்தாமணி

 "சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பின் அவர்தம் இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன் மலைகொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்". ----சீவக சிந்தாமணி, பாடல் 1413. பாடல் விளக்கம் :-  (பதுமையைப் பிரிந்த சீவகன்) "மலைசூழ்ந்த கானகத்தின் வழியே உற்சாகமாகச் செல்கிறான்" ("மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்"). எத்தகைய சீவகன் என்று திருத்தக்க தேவர் நீண்ட விளக்கம் தருகிறார் : "வில்லில் பொருத்திய நாண்  போன்று (சிலைகொள் நாணின்) உறுதியான கற்புத்திறம் வாய்ந்த (தீராத்திருந்து கற்பின்) அவளது (அவர்தம் - பதுமையின்) இலைகளும் மலர்களும் கொண்டு அணிந்த மாலையினைத் (இலைகொள் பூந்தார்) தனது மார்பினால் உழுத இன்ப வருத்தம் நீங்க (to relax a bit from the joyful pain) சற்று விலகி, அவளது முலையின் கண்களைக் கண்ணாரக் கண்டு ரசித்து (முலையின் கண்கள் கண்ணின் எழுதி) மீண்டும் தழுவும் (முள்கும்) பேராற்றல் மிக்கவன் (மொய்ம்பன்)".