Posts

About the 'God' concept to Albert

 Yes. Science is also a belief. It's based on the basic existence assumption of something and postulates (we call these 'axioms' too) governing that something and derivations lead by those postulates. For instance, atom may be that basic existence assumption in nuclear physics. Like in geometry, 'point' is the basic existence assumption. Then we postulate governing 'points' based on intuitions or reasonings which appeal to the human brain  and finally derive a lot. These derivations concur with what we perceive, see and measure in the real world. That is to say, our theory works. So we say our conclusions are valid in a world where our 'point' satisfying our axioms exists. We don't say bluntly (equivalently, we don't cheat in this context) that it does exist.       Your 'God' theory's basic existence assumption is the element called 'God'. The axioms are like (1) If you don't behave this way (the moral principles enume...

வஞ்சப் புகழ்ச்சி

 சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்திரா காந்தி அரசின் கொடுமையான மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி தாடை எலும்பு நொறுங்கியதில் அவருக்கு நிரந்தரமாக தாவாய் சிறிதளவு கோணலானதைக் கிண்டல் செய்யும் அநாகரிகத்தை அரங்கேற்றியிருந்தார். போரில் பட்ட விழுப்புண் பெருமை உடைத்தேயன்றி, வீரனை நாணுறச் செய்வதில்லை எனும் அடிப்படைப் புரிதலின்றி விஜய் செய்த ஈனச் செயல் சட்டமன்ற மாண்பிற்கு ஒரு புதிய சரிவு (a new low). எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அவரது கூட்டணிக் கட்சியினரின் கண்டனத்திற்கும் ஆளான சிறுமை பெற்ற முதல்வரானார் விஜய். ஆனாலும் இதனை நேர்மறையாய்க் காணவும் வழியுண்டு (கருமம்டா சாமி) !. ஸ்டாலின் அவர்களை சிறுமைப்படுத்துவதாய் நினைத்துப் பெருமைப்படுத்திவிட்டார் விஜய் எனக் கொள்ளலாம். மிசா சட்டத்தின் கொடுமை அறியாதோரும் தேடிப்பார்த்து, அதனை எதிர்த்துப் போராடிய களத்தில் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பும் உலகோர் அறியலாயிற்று. புலவன் ஒருவன் தலைவன் ஒருவனைத் தான் அறிந்தே, இகழ்வது போல் புகழ்தலும் புகழ...

இன்று போய் நாளை வா

இன்று போய் நாளை வா            03-09-2026 (வியாழன்) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் உடனடியாகப் பதிலுரைக்க இயலாவிட்டால், வரும் திங்கட்கிழமை வரை சட்டமன்றத்திற்கு விடுமுறையாததால் அவர் பதில்களை நன்றாகத் தயாரித்து திங்கட்கிழமை அன்று உரைக்கலாம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவு படுத்தினார். எனவே விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனடியாக ஓட வேண்டிய அவசியமில்லாதபோதும் ஓடினார். சினிமா கதாநாயகன் பாணியில், தாம் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலிறுக்கும்போது யாரும் பயந்து அன்று சட்டமன்றத்தை விட்டு ஓடி விட வேண்டாம் என்று அதிகப் பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் கேட்டுக் கொண்டு அப்போது ஓடினார். உதயநிதி அவர்கள் விஜய்க்குக் கால அவகாசம் கொடுத்ததும் விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனே நீங்கியதும் கம்பராமாயணத்தில் "இன்று போய் நாளை வா" என்று இராவணனுக்கு இராமன் அவகாசம் கொடுத்ததையும் அன்றைய போரில் தோற்ற இராவணன் போர்க்களம் நீங்கியதையும் நினைவுறுத்தலைத் தவிர்க்க இயலவில்லை.          ...

கண்டனென் கற்பினுக்கு அணியை

 கண்டனென் கற்பினுக்கு அணியை                பொதுவாக ஒரு அலுவல் மேற்கொண்டு முயற்சி செய்தவர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ திரும்பி வந்து நம்மிடம் அச்செயல் நிகழ்வு பற்றிக் கூறத் தொடங்குகையில், "சென்ற காரியம் காயா பழமா என்று முதலில் சொல்" என்று அவரிடம் கேட்பது இயல்பான ஒன்று. அவரே முடிவினை அறிவித்துவிட்டு நிகழ்வு பற்றி நீட்டி முழக்குவது சிறப்பு. அதைத்தான் கம்பனின் அனுமன் செய்கிறான். அன்றைய உபந்நியாசகர்கள் முதல் இன்றைய சொற்பொழிவாளர்கள் வரை இலங்கை சென்று மீண்ட அனுமன் ராமனிடம், "கண்டேன் சீதையை" (கண்டனன் கற்பினுக்கு அணியை) என்று ஆரம்பித்த விதத்தை அழுத்தமாகத் சொல்லத் தவறுவதில்லை. அதிலும் " 'சீதையைக் கண்டேன்' என்றில்லாமல் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி ராமனை முதலில் ஆறுதல் படுத்தினான் அனுமன்" என்றும் சிலாகிப்பர். "கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண்டிரை அலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும் பண்டுள துயரும் என்றனுமன் பன்னுவான்" பொருள் : கற்பினுக்கு அணியினை (சீதையை) என் கண்களால் கண்டேன் -  தெள்ளிய அலைகளை உடைய கடல் (தெண் த...

அழகியல் ஓர் உயரியல்

 பாலகாண்டத்தில் கோசல நாட்டின் மருத நில வருணனையில் நம்மைக் கிறங்க அடிக்கிறான் கம்பன் : "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ" பொருள் : குளிர்ச்சி பொருந்திய நிலத்தில் (தண்டலை - தண் தலை) - அஃதாவது சோலையில் - மயில்கள் ஆடுகையில், தாமரையாகிய விளக்குகள் ஒளிர்ந்து நிற்க, மேகங்கள் (கொண்டல்கள்) முரசொலிக்க (முழவின் ஏங்க), குவளையாகிய கண்கள் விழித்து நோக்க, தெள்ளிய நீரலைகள் (தெண்டிரை - தெண் திரை) திரைச் சீலையாய்த் திகழ (எழினி காட்ட), தேனைப் பிழிந்தெடுத்த (தேம் பிழி) இனிமை(சுவை)யொத்த மகர யாழின் இசை போன்று வண்டுகள் இனிமையாய்ப் பாட, மருத நிலமகள் வீற்றிருக்கின்றாள்.               கம்பனின் மேற்கூறிய இயற்கை வருணனை சீவக சிந்தாமணியின் கேமசரியார் இலம்பகத்தில் 1417 ஆம் பாடலை நினைவுறுத்துகிறது : "சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா வனையலாகா உருவ நோக்கி மைந்தற் கிரங்கி இனைவ போலும் வரையின் அருவி ......

அறிமடமும் சான்றோர்க்கு அணி

 "முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்  சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப  அறிமடமும் சான்றோர்க்கு அணி"                       பழமொழி நானூறு; பாடல் 361. பாடியவர் : முன்றுறை அரையனார் பொருள் : முல்லைக்குத் தேரை அளித்தமையும் (பாரி), மயிலுக்குப் போர்வை அளித்தமையும் (பேகன்) முற்காலத்தில் (தொல்லை - தொன்மை, முற்காலத்தில்) அறிவோம். செறிவான மடல்களுடன் பூத்திருக்கும் தாழைச் செடிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவனே ! (புலவர் தாம் பாடும் அரசனை உரிய முறையில் விளிக்கிறார்). அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதலும்  (சில தருணங்களில்) சான்றோர்க்கு அணி (சிறப்பு) சேர்ப்பதாகும்.

வேவத் திரிபுரம் செற்ற வில்லி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் :            நேற்றைய பாடலில் நாவுக்கரசர் திருவையாறு பதிகத்தில் சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு  சமநிலை பாராட்டியதைக் கண்டோம். அதே போன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தின் திருவார்த்தை பதிகத்தில் பன்றியைப் பேணுதல் காணலாம். "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய;  செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய;  எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி -  திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்;  தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல;  எம்பிரான் தான் வேடுவனாய் -  என் பிரானாகிய சிவன் தான் வேடனாக;  கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர;  இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்;...