அறிமடமும் சான்றோர்க்கு அணி
"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க்கு அணி"
பழமொழி நானூறு; பாடல் 361.
பாடியவர் : முன்றுறை அரையனார்
பொருள் : முல்லைக்குத் தேரை அளித்தமையும் (பாரி), மயிலுக்குப் போர்வை அளித்தமையும் (பேகன்) முற்காலத்தில் (தொல்லை - தொன்மை, முற்காலத்தில்) அறிவோம். செறிவான மடல்களுடன் பூத்திருக்கும் தாழைச் செடிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவனே ! (புலவர் தாம் பாடும் அரசனை உரிய முறையில் விளிக்கிறார்). அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதலும் (சில தருணங்களில்) சான்றோர்க்கு அணி (சிறப்பு) சேர்ப்பதாகும்.
Comments
Post a Comment