Posts

Showing posts from April, 2020

படமாடக் கோயில் ... - திருமூலர்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".         -------- திருமூலர். முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில்  சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின்  ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது. பாடற் பொருள் :- படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும். பின் விளக்கம் :- இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில்  உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார். " நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள்  ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீர்கள்" - (மத்தேயு 25:40) எனக் கிறித்துவத்திலும், "தம் பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக பந்துக்களுக்கும்,  அநாதைகளுக்கும

நனி நாகரிகம், நயத்தக்க நாகரிகம் - நற்றிணை, குறள்

தினம் ஒரு தமிழ்ப் பாடல். "முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்"  ------நற்றிணை : பாடல் 355, வரிகள் 6-7. பாடற் பொருள் :- முன்னைக் காலத்தில் இருந்தே நட்புறவு கொண்டோர் நஞ்சையே கொடுத்தாலும், நாகரிகம் (etiquette, benignity) அறிந்தோர் அதனை ஏற்று உண்டு அமைவர். மேல் விளக்கம் :- பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லையே என நாம் நினைக்கலாம். பன்னெடுங்காலம் தேர்ந்து தெளிந்த நட்பின் சிறப்பும், தேர்ந்து தெளிதலின் அவசியமும் பாடலின் உள்ளூடாய் அமைந்தது எனலாம். இஃது அகப்பாடலின் உள்ளே, தகைசால் பண்பினை எடுத்துக்காட்டவே கையாளப் பட்டுள்ளது. இதனையே முதற் பொருளாய் வைத்து 'கண்ணோட்டம்' எனும் அதிகாரத்தில் வள்ளுவன், "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்"என்பான். காலத்தால் முந்திய நற்றிணையை அதே 'நாகரிக' சொல்லாட்சியுடன்  வள்ளுவன் எடுத்தாண்டமை 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தகைமை. நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவனின் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது.

தாயுமானவர் 3

*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* ஓட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ? - தாயுமானவர் பாடற் குறிப்பு :- தாயுமான சுவாமிகளின் 'எந்நாள் கண்ணியில்' 'அடியார் வணக்கம்' எனும் 3 வது பகுதியில் 5 வது பாடல். அடியார்களைப் போற்றும் பகுதி 'அடியார் வணக்கம்' ஆகும். பாடற்பொருள் :- உலகப் பற்றினைத் துறந்து திருவோடு மட்டுமே உடமையாகக் கொண்ட 'செல்வந்தரான' பட்டினத்தார், பத்ரகிரி சுவாமிகளின் உயர்வினை (பண்பினை) நாம் உணர்வது எந்நாளோ ? பின்குறிப்பு :- பட்டினத்தார் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பத்ரகிரி சுவாமிகள் பட்டினத்தார் சுவாமிகளின் சீடர். அரசனாயிருந்து ஆண்டியானவர் என்று குறிக்கப்படுகிறார். இவரது பாடல்கள்   'பத்ரகிரி புலம்பல்' என்று  தலைப்பிட்டு அறியப் பெறுபவை. இருவரது காலமும் 10 ம் நூற்றாண்டு.

திருமண வாழ்த்து - பாரதிதாசன்

ஒரு மனதாயினர் தோழி இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி பெருமனதாகி இல்லறம்  காக்கவும் பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும் ஒரு மனதாயினர் தோழி!     -----பாரதிதாசன்.

திருமண வாழ்த்து - செம்புலப் பெயல்நீரார் (குறுந்தொகை)

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே (குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)

திருமண வாழ்த்து - நாச்சியார் திருமொழி

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.  -- நாச்சியார் திருமொழி

திருமண வாழ்த்து - சம்பந்தர் தேவாரம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதோர் குறைவுமிலை ......................................... பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே.     ---- சம்பந்தர் தேவாரம்.

தாயுமானவர் 2

*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* சுக்கிலமும் நீரும் சொரியமலமும் நாறு முடற் புக் குழலும் வாஞ்சை இனிப் போதும் என்பது எந்நாளோ?         -------- தாயுமானவர். பாடற் குறிப்பு :- தாயுமானவர் பாடிய கண்ணிகளில் 'எந்நாள் கண்ணியில்' நான்காவது பகுதியான 'யாக்கையைப் பழித்தல்' இல் முதற் பாடல். யாக்கை என்பது உடல். யாக்கையைப் பழித்தால் - உடலை வெறுத்தல். பாடற் பொருள் :- "விந்தும் (சுக்கிலம்) சிறுநீரும் மலமும் சொரிந்து நாறும் உடலுடன் உழலும் பற்று (வாஞ்சை) - உடலைப் பேணும் பற்று - இனி போதும் என்னும் மனநிலை பெறுவது  எந்நாளோ ?" என்று ஏங்குகிறார் தாயுமானவர். மேற்குறிப்பு :- தரப்பட்ட பாடலுக்குப் பொருள் எழுதியுள்ளேன். மற்றபடி தாயுமான சுவாமிகளின் யாக்கையைப் பழிக்கும் கோட்பாட்டில் உடன்பாடு உண்டு என்ற பொருளில்லை.

தாயுமானவர் 1

*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* உடம்பறியும் என்னுமந்த ஊழலெல்லாம் தீரத் திடம் பெற வே எம்மைத் தரிசிப்பது எந்நாளோ?              -தாயுமானவர். பாடற் குறிப்பு :- தாயுமானவர் 'கண்ணிகள்' எனும் தலைப்பிட்டுப் பாடல்களை இயற்றினார். 'பராபரக் கண்ணி'யில் பாடல்கள் 'பராபரமே' என முடியும். 'பைங்கிளிக் கண்ணி'யில் 'பைங்கிளியே' என முடியும். ' எந்நாள் கண்ணி'யில் பாடல்கள்  'எந்நாளோ' அல்லது 'எந்நாளே' என முடியும். மேற்கூறிய பாடல் எந்நாள் கண்ணியில் 'தன் உண்மை' எனும்  ஏழாவது பகுதியில் முதற் பாடல். முன் விளக்கம் :- முறைப்படி - நெறிப்படி - நிகழ்வதற்கு ஊழ் என்று பெயர். (முன்னை வினையின் பயனாய் நிகழ்வது என்பது முறைசார்ந்த நிகழ்வாய்க் கொள்ளப்பட்டதால், ஊழ்வினை எனப்பட்டது. முறைதவறியது ஊழ்+அல் = ஊழல் ஆனது ). பாடற் பொருள் :- உடல் சார்ந்த சிற்றின்பம் (!) எனும் அக்குற்றமெல்லாம்  (!!) தீர்ந்து உள்ளம் திடம் பெற எம் இறைவனின் (எம்மை = எம் + ஐ; ஐ என்பது தலைவனைக் - இறைவனை - குறிப்பது) தரிசனம் கிடைக்கும் நாள் எந்நாளோ ? மேற்குறிப்பு :- பொதுவாக பட்டின

கணியன் பூங்குன்றனார்

*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதெனமகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாதென்றலும்  இலமே. _ புறநானூறு புறநானூறு பாடல் 192; பாடியவர் கணியன் பூங்குன்றனார். இப்போது எடுத்தவை பாடலின் தொடக்க வரிகள். இப்பாடலின் சிறப்பு - எளிய வரிகள்; சீரிய கருத்துக்கள். உலகோர்க்கான சிறந்த மாண்புகள் சிலவற்றைக் கூறுகிறது பாடல். இனி எடுத்த வரிகளின் பொருள் : (1) உலகம் அனைத்தும் எம் ஊரே ; உலகோர் அனைவரும் எம் சுற்றத்தாரே (*கேளிர்) (2) நமக்கான தீமையும் நன்மையும் பிறர் தந்து வருவதில்லை ; அவற்றிற்கு நாமே காரணம் (Never try to blame others for our miseries) (3) நாம் துன்புறுதலும்  (நோதலும்), அத்துன்பம் நீங்குதலும் (தணிதலும்) அது போலவே (நாமே காரணி). (4) இவ்வுலகில் சாதல் ஒன்றும் புதிய நிகழ்வல்ல (* புதுவது அன்றே). ஆகையால் இன்பம் நேரும்போது வாழ்வு இனிமையானது என்று மகிழ்வதும், துன்பம் நேரும் போது  அவ்வாழ்வு இன்னாதது என்று வெறுப்பதும் நம்மிடம் இல்லை (இருக்கக் கூடாது என்பதை 'ஏற்கெனவே நம்மிடம் இல

கணியன் பூங்குன்றனார், பக்குடுக்கை நன்கணியார்

வரிகள் இரண்டு புறநாற்றுப் பாடல்களில் உள்ளவை : (1) "மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" ---- புறநானூறு 192 வது பாடல்; பாடியவர் - கணியன் பூங்குன்றனார்; பாடல் தொடக்கம் - "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." மாட்சியில் - செல்வம், பதவி போன்ற உயர்வுகளில். எடுத்த வரிகளின் பொருள் : செல்வம், பதவி போன்ற படிநிலைகளில் மேல் நிற்போரை நாம் (அறிவு சார் சமூகம்) வியந்து பணிதலும் இல்லை; கீழ் நிற்போரை இகழ்தலும்  (அல்லது உதாசீனப் படுத்துதலும்) இல்லை. This is best explained by Albert Einstein's famous quote " I speak to everyone the same way whether he is the Garbage Man or the President of the University". (2) "இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே" ---------- புறநானூறு 194 வது பாடல்; பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்; பாடல் தொடக்கம் - "ஓர் இல் நெய்தல் இறங்க ஓர் இல் ஈர்ந்தண் முனிவின் பாணி ததும்ப...." பாடல் முழுப் பொருளையும் தொட்டுச் சென்றால்தான் எடுத்த வரிகளுக்கு விளக்கம் கிடைக்கும். முந்திய வரிகளி

Driving away Sanghis from WhatsApp groups

All issues concerning welfare of people should find a place here. In my opinion, only sanghi posts should be out of place in any group with rational thinking. In fact, I feel all such progressive  groups should ban sanghi posts, if not the sanghis themselves.  That different political opinions should be accomodated is a democratic principle. Fascism cannot be counted as a political opinion in a democracy. One of my social activist friends, who as a sole admin runs two WhatsApp groups on different social issues, came down heavily on Sanghis and Sanghi posts. Keeping in line with this principle, henceforth Sanghi posts will not be allowed here. Whether a post is Sanghi or not will be decided by the Admins in consultation with some others and accordingly the post will be deleted, if necessary. If someone keeps on repeating, he will be asked to leave. We can live without a Sanghi group. We convey this at a time when there is no Sanghi post. If we wait till something is posted, it may be

On Telugu speaking people in Tamilnadu

தெலுங்கர்கள் பெரிய அளவில் கிருஷ்ண தேவராயர் காலத்திலும், திருமலை நாயக்கர் காலத்திலும் தமிழ் மண்ணில் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் அவர்கள் இந்த மண்ணில் கலந்து, நம் மொழியில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளத்தை இழக்க வேண்டும் என்று தமிழினம் விரும்புவதில்லை என்றாலும் கூட, அவர்கள் சூழலுக்குப் பழகினார்கள். தங்கள் பரம்பரையின் எச்சமாக, தங்கள் வீடுகளில் ஏதோ உடைந்த தெலுங்கை  பேசிக் கொள்கிறார்கள், அவ்வளவே. சுமார் நானூறு ஆண்டுகளில் தமிழர்களாகவே ஆனார்கள். தமிழுக்கு வளமை சேர்த்தார்கள் -  தமிழில் சாகித்ய அகாதமி விருது வாங்குகிற அளவிற்கு. எனவே இந்த மண் எனக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவு அவர்களுக்கும் சொந்தம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்கள், மூளைச்சலவை செய்து தமிழர்களைத் தமது சடங்கியல்களுக்கு  மாற்றினார்கள். மூளைச்சலவைக்குத் தமிழன் தயாராக இருந்ததும் இருப்பதும் அவனுக்கான அவலம். செத்த மொழியைத் தமிழில் கலந்து ஆக்கங்கெட்ட நடைக்கு மணிப்பிரவாள நடை என்றெல்லாம் பெயர் கொடுத்தார்கள். உறவாடிக் கெடுத்தவர்கள் இன்னும் தமிழர்களாக ஆகவில்லை. தமிழ் அடையாளத்தையே இன்றும் அழிக்க முனைகிறார்கள்.

On Ambedkar

இந்து என்ற பெயரில்  ஒளிந்திருப்பது, பிராமணிய சநாதனம் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார் அண்ணல் அம்பேத்கர். சநாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கும் மனுநீதி வழி நிற்பது.  இந்தியாவை எல்லா வகையிலும் சரியாகப் புரிந்தவர் அம்பேத்கர். உதாரணமாக, இந்த நிலத்தின் (ஒட்டுமொத்த இந்திய நிலத்தின்) பூர்வ குடிகள் என்றால் தமிழர்களைத்தான் சொல்ல முடியும் என்று கீழடிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளியை வைத்தே சொன்னவர் அம்பேத்கர். அத்துணைச் சான்றாண்மை படைத்தவர் நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெறற்கரிய பேறு.

My mention of Sudha Bharadhwaj in IITK Math Alumni group

Only recently I learnt that the great social activist Sudha Bharadhwaj is the one I know as my junior at IITK. When I joined IITK in 1982 for my Ph.D, she was in her fourth year Integrated Mathematics. Proud to be almost her contemporary. One of my friends made a remark, "Generally people go around proudly declaring to be contemporaries of achievers in academics or administration". Everyone is of a different make. So am l. Which better place can I find than this group to cherish my simple existence at IITK at her times ?

First they came for the Socialists .........

First they came for the socialists, and I did not speak out—because I was not a socialist. Then they came for the trade unionists, and I did not speak out— because I was not a trade unionist. Then they came for the Jews, and I did not speak out—because I was not a Jew. Then they came for me—and there was no one left to speak for me.                             -------------  By Pastor Martin Niemoller who was in a Nazi concentration camp during the last seven years of the Nazi rule.

C.N.N 2

👆மீண்டும் என்னுள் உறையும் கதை சொல்லி விழித்தெழுந்து ஒரு குட்டித் கதை சொல்கிறான் :  சுதந்திரப் போராட்டம் நடந்த போது தபால் பெட்டி ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு நபர் போராளிகளுடன் ஒரே தண்டனைச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். விடுதலையான பின் அவர் அவராகத்தான் வாழ்ந்தார்; மறைந்தார். கதை முடிந்தது.

C.N.N 1

வெகு நாளாயிற்று கதை சொல்லி. 'அவரா இவர்!' என நான் ஆச்சரியப்பட்ட ஒருவரின் கதையை உங்களுடன் பகிர எண்ணம். அவரை X என்று குறிப்போம். தமது 17 வது வயதில் (1958 ல்) இளங்கலை மாணவராக இருந்த போது, தி.க வின் 'விடுதலை' பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை அனுப்பினார். இளைஞர்களை ஊக்குவிக்கும் பெரியார் அக்கட்டுரையைப் பிரசுரித்தார். அது சௌகார்பேட்டையை வட இந்திய பனியா சமூகத்தினர் ஆக்கிரமிரப்பதற்கான எதிர்க்குரல். ஏற்கெனவே திராவிடர் கழகம் கையிலெடுத்த விஷயம்தான். குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, 'விடுதலை' யின் மீது ஏற்கெனவே காட்டத்தில் இருந்த அதிகார வர்க்கம், இந்தக் கட்டுரையை எடுத்துக் கொண்டு பத்திரைக்கையின் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. வடவரை மட்டுமல்ல, பிராமணர்களையும் சாடுவதே அதற்கு முக்கிய காரணம். அக்காலத்தில் அதிகார வர்க்கம் என்றால் அவர்கள்தானே!  கட்டுரை எழுதிய நமது X க்கும், பத்திரிக்கை ஆசிரியர் மணியம்மையாருக்கும் எதிராக அரசு வழக்குத் தொடர கோப்பு தயாரானது. நிதியமைச்சர்  சி.சுப்பிரமணியம் குறிப்பெழுத, உள்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் வழிமொழிய, முதலமைச்சர் காமராஜர் ஒப்புதலளித்

Anti-Sanghi 2

சங்கிகளுக்கு இன்று பொதுவான ஒரு நடைமுறை வழக்கம் உண்டு (behaviour pattern) - அது அவர்களது ஷாகாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். WhatsApp குழுமங்களில் வெறித்தனமாகப் பதிவிடுவார்கள். வேறு எந்த கட்சிக்காரர்களும் தங்கள் கட்சி அரசியலை முன்னெடுப்பதில்லை. அதனால் எல்லாக் குழுமங்களிலும் சங்கி அரசியல், அதற்கெதிரான அரசியல் (anti- Sanghi) என்று இரண்டு ரகம்தான் உண்டு. சங்கிப் பதிவுகளில்  இப்போது தங்கள் தரப்பு நியாயம் தமிழகத்தில் எடுபடாது என்பதால், அவர்களை மிரட்டும் இரண்டு பேரை மட்டும் குறி வைப்பார்கள். ஒன்று ஸ்டாலின் -  கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் அவர் முன்னிலை வகிப்பதால். இரண்டு பினராயி விஜயன் -  அவர் பரவலாக அறிவார்ந்த சமூகத்தினரால் போற்றப் படுவதாலும், கேரள மக்களின் ஏகோபித்த ஆதரவோடு திகழ்வதாலும். இந்த வரைமுறைக்குள் தெளிவாக வரும் நீங்கள் ஏன் முக்காடோடு வெளியே வர வேண்டும்? முக்காடை விலக்குங்கள்.  நேர்மையாவது மிஞ்சும்.நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள். எங்களுக்கு ஸ்டாலின் மீது எந்த அபிமானமும் கிடையாது. சங்கி அரசியலைத் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் தடுக்க நாங்கள் எடுக்கும் ஆயுதமே

Anti-Sanghi 1

இந்தியாவில் பிறந்த எந்த இசுலாமியருக்கும் பாதிப்பில்லை என்று மட்டுமே பாஜகவும் அடிமை அதிமுகவும் முழங்குகின்றன. வெளியிலிருந்து (2014 க்குப் பிறகு) வந்தவர்களை விரட்ட முடிவு செய்த பின் அதில் மதப்பாகுபாடு ஏண்டா என்ற கேள்விக்கு எவனும் பதில் சொல்லத் தயாரில்லை. இதை ஏற்றுக் கொண்டால், இப்பாகுபாட்டை எல்லா விஷயங்களிலும் உன் பாசிசம் கொண்டு வரும் என்பது எங்களுக்குத் தெரிவதாலேயே போராடுகிறோம்.  'எந்தவொரு மாற்றத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வரக்கூடாது; அதைப் பிரித்து பகுதி பகுதியாக அமல் படுத்த வேண்டும். மக்கள் உணர்வதற்குள் காலம் கடந்து விடும்' என்று இவர்களுக்காகவே வெளிப்படையாக ஓதியவன்தான் ஹிட்லர். இப்போது இந்துத்துவாவாதிகள் எப்படி இந்த ஆட்சியாளர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்களோ, அப்படியே நாஜிக்கள் ஹிட்லரைத் தூக்கிப் பிடித்தார்கள். இவர்களின் அழிவும் அப்படியே நிகழும்.

On MGR

I have always wondered at individuals on their own, independent of party lineage, bringing out wall posters on birth and death anniversaries of MGR even after around 35 years of his demise. Whatever be our criticisms on his political and professional existence, he seems to  have left a lasting impression on people's lives. I can't help but accept that the man was a legend in his own lifetime. Also I don't think anyone of the present, be it of the screen or of Tamil politics, would stand the test of time as he did. Nambi seems to be one of those admirers carrying the evergreen memories of MGR. Carry on Nambi ! Afterall an ideal, big or small, real or imaginary, serves as a leading light for one's life. All the best.

On Jaggi Vasudev's anti-protest view

I totally disagree with this guy (may be Sadguru for some). It's a typical slow-poisoning anti-Gandhian propaganda of the Nazi- RSS. How is it slow-poisoning? Initially they will say it was okay to have Gandhian ways of protest in those days, thus injecting into your mind that Gandhi doesn't transcend his time. Once you start accepting it, they will start degrading Gandhi even of his times. In a democracy, if you don't allow protests, bandhs etc., you are pushing the citizens to the wall to resort to violence and a civil war. With the newly found dangerous political strength at the centre, does the 'Sadguru' feel that everything can be dealt always with the muscle/muzzle strength of the lawmakers and the lawkeepers ?

This world is neither for the lazy nor for workaholics

Sorry Madam ! I beg to differ. That is the destiny of a lion and it cannot be a model for mankind. Survival of the fittest is the dictum of the jungle. A civilized society is supposed to be moving towards peace and security for all, independent of the strength of any individual in any aspect whatsoever. True, people keep attacking. But it's the responsibility of a civil society to civilize even the aggressor. Rather than campaigning to live always under threat and conquer, it's better to shun down aggression as barbaric. "Keep running to remain in the same place" is the creation of workaholics. My view is that this world is not for the lazy and it's not for workaholics either. I am sorry if I have stretched your viewpoint too far.

Anti-Brahminism 2

ஆதிக்க மனப்பான்மை  தனிமனிதனிலும் உண்டு என்பதை ஏற்கிறேன். சமூகம் சார்ந்து இல்லை என்பதை நம்ப விரும்புகிறேன். ஒரு காலத்தில் நம்பவும் செய்தேன். ஆனால் என் விருப்ப சிந்தனைக்காக (wishful thinking), குழு மனப்பான்மை (Mass mentality) என்ற நிதர்சனத்தை நான் ஏன் தவிர்க்க வேண்டும்? சமூக நிலை தெரிந்தால்தான் சமூகத்தில் நம் கருத்துக்களை சரியாக நிலைப்படுத்த முடியும். உதாரணமாக என் இடதுசாரித் தோழர்களிடம், "அதெப்படி எந்த விஷயத்திலும் நீங்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்? அதிகாலையிலேயே தீக்கதிரை மனப்பாடம்  செய்து விடுவீர்களோ?" என்று கிண்டலடித்திருக்கிறேன். அதுபோல் பார்ப்பன ஆதிக்க சக்திகளில் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்று சொன்னாலே விதி எது என்பது தெளிவு. An exception proves the rule; it disproves the rule only in mathematics.

Anti-Brahminism 1

எல்லாச் சாதிகளிலும் தன் சாதியுணர்வு மற்றும் அது சார்ந்த சேட்டைகள் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழின அடையாளங்களை அழிப்பது/ மறுப்பது என்ற பொல்லாமை இவர்களிடம் மட்டுமே உண்டு. வள்ளுவத்திற்கு உரையெழுதிய பரிமேலழகர் முதல் இன்றைய குருமூர்த்தி வரை இதனை நீக்கமறக் காணலாம். ஜல்லிக்கட்டு, மீத்தேன், அணு உலை, ஸ்டெர்லைட் என்று எதையெடுத்தாலும் பெரும்பான்மைத் தமிழருடன் நின்ற ஏதேனும் பிராமண நண்பர் உங்களுக்கு உண்டா? வளர்ச்சித் திட்டங்கள் என்று வஞ்சனை சொல்வார். இந்துத்துவாவை பார்ப்பனியம் என்று மட்டுமே பார்க்கிறேன். அதனால் அதை எதிர்க்கிறேன். மற்றபடி ஏனைய மதத்தாரிடமும் சேட்டைகள் இல்லையா, என்ன?

Anti - North Occupation, Anti-Neet, Anti - JEE Coaching etc.,.

இது ஒரு பொய்யான பார்ப்பனியப் பரப்புரை. தமிழனின் சினிமா மோகம் என்றும் உள்ளதுதான். அதையும் மீறி அவன் கல்வியில் (இந்திய அளவில் மட்டும்) சிறந்து விளங்கியதும், விளங்குவதும் பதிவான உண்மை. பீகார், உ.பி., அரியானா போன்ற மாநிலங்களில் பிள்ளைகளை நகராட்சி, அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டு பொய்யான வருகைப் பதிவைப் பெற்று முழு நேரமும் coaching centreல் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது உங்களுக்குத் தெரியுமா? இங்கும் அதைப் பார்த்து IIT-JEE நுழைவுத் தேர்வுக்கு எட்டாம் வகுப்பிலேயே தயார் செய்யும் முட்டாள்தனம் இந்த சமூகத்திற்குத் தேவைதானா? JEE,NEET தேர்ச்சி பெறுவதுதான் வாழ்வின் உன்னத லட்சியமா? இதை வைத்து நம் பிள்ளைகள் படிப்பில் பின் தங்கி விட்டார்கள் என்பது எத்துணை மடமை? நம்மவர்களும் இப்போது coaching cultureல் தள்ளப்பட்டதால், இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இதிலும் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள் என்பது வேறு விஷயம்.    இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழகத்தில்  ரயில்வேயில் சுமார் 1650 பணியிடங்களில் அநேகமாக 1500 இடங்களில் வடநாட்டான் வந்தது எப்படி? அதில் தமிழ் மொழித்தாள் உண்டு. தமிழ் தெரியாதவன

Brief bio-data

Dr.S.Somasundaram was born and brought up in Palayamkotai. He had his school and college education at St. Xavier’s,Palayamkottai. He did his Ph.D thesis in Harmonic Analysis at I.I.T. Kanpur . He has lived in Italy for a year and has visited France for higher studies in Mathematics. He is presently a Professor of Mathematics at M.S.University, Tirunelveli. He is a recipient of Tamilnadu Scientist Award in 2010. He has guided 18 Ph.D scholars in Graph theory, Fixed point theory and Point set Topology. He  has to his credit around 85 publications in national and international journals. Besides Mathematics, his interests include literature and social activities in and out of his University Campus.

Hang the boys before Lahore Congress

Regarding the Hindutva guys celebrating Bhagat Singh, Sukhdev and Rajguru, I have some information to share with people (Sam may be knowing). Mahatma Gandhi had written to Lord Irwin requesting the Government 'to hang the boys (Bhagat & Co.) before Lahore Congress'. Though unjustifiable on any count, the reason for Gandhi's letter is that he could foresee Lahore Congress' resolution appealing to the Government to commute the death sentence or even set free the boys; this would obviously be an irritant in the 'full independence' talk table to which the British seem to have come around. Presumably Mahatma Gandhi had decided to sacrifice the boys in the larger interest of freedom. The Hindu Mahasabha & Co. started using this letter as one of the points of justification for the assassination of Mahatma Gandhi. Perhaps Godse himself put forth this in his defence counsel in the court which I have to check. I wish to add that ideologically Bhagat Singh was nev

Snub 8

எந்த பயம் ? இருப்பினும் சொல்கிறேன். பாரதி சொன்ன அஞ்சி அஞ்சிச் சாவாரும் உண்டு. அஞ்சாது அண்டிப் பிழைக்கும் அயோக்கியரும் உண்டு. முதல் ரகத்துக்கு தைரியம் சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். அடுத்த ரகம் பிறவி ஊனம். சரி செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீது இந்த அவநம்பிக்கை சமீப காலமாகத்தான - சுமார் மூன்று வருடங்களாக இருக்கும்.

Snub 7

நல்வரவாகட்டும். இனி வழக்கமான காட்சிகள் அரங்கேறக் காணலாம். அதிகாரமே உணவாகக் கொள்ளும் விந்தை மனிதர் (அற்பர் என்பதன் இடக்கரடக்கல்) புதிய நிர்வாகத்தின் அருட்பார்வை வேண்டி சுற்றிச் சுற்றி வருவர். இதுகாறும் துதி பாடிய சிலர் நேற்றைப் பழித்து இன்றைப் புதிய துதியோடு தொடங்குவர். கோயிலில் சாமி மாறும். பூசாரிகள் மாறுவதில்லை. காட்சியும் மாறுவதில்லை. (படித்த?) பட்டதாரிச் சமூகத்தில் இந்த இழிநிலை. படித்தவன்தான் பாதகம் செய்வானோ? ஒழுங்காப் படிங்கடா என்று இவர்களுக்கு யார் சொல்வது?

Snub 6

கதை இரண்டு. ஒரு நாட்டில் ஒரு மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாராம். என்னது? மன்னராட்சியில் தேர்தலா என்று லாஜிக்கெல்லாம் பேசப்படாது. கதை சொன்னா நல்ல பிள்ளையா கேட்கணும். அவர் சாதுவாகத் தெரிந்தார்; நல்லவராயிருக்கலாம்; கனவு மெய்ப்பட ஆசை. சில காலங்கள் முன்பு தகப்பன் சாமியாய் வந்த மன்னர் ஒருவர் தாமே முடிவெடுக்காததால், அவருக்காக முடிவெடுக்க ஒன்றிரண்டு அல்லக் கைகள் இருந்தன. அவை மக்களுக்கு அல்லவை செய்தலையே குலத் தொழிலாய்ச் செய்து வந்தன. அந்த அல்லக் கைகள் தற்போதைய மன்னரைக் கண்டதும்  மீண்டும் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தன. அடேய்! முதல் நாளிலேயேவா ? அவர்கள் எக்ஸ்ரே கண்ணில் கொள்ளி வைக்க. அவர்களுக்கெல்லாம் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று சபிப்பதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே. கதை முற்றுப் பெற்றது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் நீங்கள் நல்ல பிள்ளை; உங்கள் பெற்றோர் உங்களை நல்ல வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். உடனே பிரச்சினையில்லாத பதிவுகளுக்குச் செல்லவும்.

Snub 5

நண்பர்களிடம் கதைக்க ஆசை. இரண்டு கதைகள் உண்டு. முதலில் காக்காய் கதை. "ஒரு ஊர்ல ஒரு காக்காய் இருந்துச்சாம்" என்று ஆரம்பிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் குழந்தைகள் இல்லையே ! கற்றுக் கரைபுரண்ட ஆன்றோர் சான்றோர் ஆயிற்றே ! இதோ கதை. காக்காய் பிடிப்பதில் மூன்று ரகமுண்டு. முதல் ரகம் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்காயைப் பிடிப்பது. இரண்டு, பறக்கும் காக்காயைப் பிடிப்பது. மூன்று, பறந்து சென்று பிடிப்பது. இந்த மூன்றாம் ரகம் இம்முறை பிடிப்பதற்குப் பதிலாக பறந்து சென்று விட்டு வந்தது. அது ஏன்? முதல் கதை முடிந்தது. ஆனால் கதை விடுகதையானது. உங்களுக்குப் புரியவில்லையென்றால், நீங்கள் அந்த மூன்றாம் ரகம் இல்லை என்று பொருள்.

Snub 4

Friends, I heard someone murmur regarding my getting active in this group in recent times. I wish to inform that I have been included in this group recently. Had I known about this group before, I would have pestered people to gain my entry. Moreover my uncompromising stand on issues against any administration is known to the entire campus community. I have never shared with you my exchanges with the administration. Neither should I. This is not to boast of my strength, for as an individual I don't have any strength of my own. My Union is my strength and my religion,  whichever Union I belong to.  Also I take this opportunity to pass on to people the following message: Believe in your Union, again whichever Union you belong to. சட்டம் தரும் பாதுகாப்பை விட சங்கம் தரும் பாதுகாப்பே உறுதியானது எனும் தோழர் சண்முகசுந்தரத்தின் கூற்று காலத்தால் அழியாதது. நன்றி.

Snub 3

அங்கதம் தமிழில் இன்னும் சிறப்பாக வரும் என நினைக்கிறேன். அந்த வீடியோவில் உள்ள பதிவை ஒருவர் இவ்வாறு எடுத்துக் கொண்டார்; அதாவது அலுவலகத்தில் உள்ள வரை பதவி, பதவிசு போன்ற இழவுகளைக் கட்டி மாரடிக்கலாம் என்று. நாம்தான் அலுவலக வளாகத்திலேயே  வாழ்கிறோமே! அதனால் 24 மணி நேரமும் அந்த இழவாகவே வாழலாம் என்று நினைத்தார். விளைவு இரவில் உறக்கம் வராமல் தோன்றும் கற்பனையெல்லாம் காலையில் சுற்றறிக்கையானது. அவரைப் போன்றே ஏதாவது அதிகாரத்தை எதிர்பார்த்த கூட்டம் அதைக் கொண்டாடியது. தேவைப்பட்டால் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு அக்கற்பனைகளுக்கு அங்கீகாரமும் தந்தது. கதை இப்போதைக்கு முடிந்தது.

Snub 2

A nice message for the poor guys brought up in a hierarchy conscious, power crazy school of thought. I like to go for an improvised version, though. Even in office, an ideal officer shall become aware of his/her  designation or position only if forced by people or circumstances ; normally he/she must be conscious only of the  responsibilities associated with the position as any public servant. Friends, I wish to go for another post in this regard lest this should be construed as a long one. The next may be taken in humour or as an allegory.

Snub 1

When one of our Colleagues posted a press release regarding 75% of VC's being unfit for the job, two or three left the group and the reason was glaringly obvious. A press report  on MSU is the most relevant item in this group to be posted and discussed. If anyone has an alternate view in the news posted, he/she should be courteous enough to reply or respond. Moreover the person who posted (like Sam did) has not come out with any criticism on any official or administration they are at liberty to adore (or even worship!). So the way people sneak out on such issues gives me a feeling that some of them are hell bent on showing their loyalty to someone who might even be present (or omnipresent) in this group. Whatever it be, it doesn't make of a group of intellectuals to avoid diametrically opposite views.