தாயுமானவர் 3

தினம் ஒரு தமிழ்ப் பாடல்
                        - சுப.சோமசுந்தரம்

"ஓட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப்
பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ?"
- தாயுமானவர்

பாடற் குறிப்பு :-
தாயுமான சுவாமிகளின் 'எந்நாள் கண்ணியில்' 'அடியார் வணக்கம்' எனும் 3 வது பகுதியில் 5 வது பாடல். அடியார்களைப் போற்றும் பகுதி 'அடியார் வணக்கம்' ஆகும்.

பாடற்பொருள் :-
உலகப் பற்றினைத் துறந்து திருவோடு மட்டுமே உடமையாகக் கொண்ட 'செல்வந்தரான' பட்டினத்தார், பத்ரகிரி சுவாமிகளின் உயர்வினை (பண்பினை) நாம் உணர்வது எந்நாளோ ?

பின்குறிப்பு :-
பட்டினத்தார் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பத்ரகிரி சுவாமிகள் பட்டினத்தார் சுவாமிகளின் சீடர். அரசனாயிருந்து ஆண்டியானவர் என்று குறிக்கப்படுகிறார். இவரது பாடல்கள்   'பத்ரகிரி புலம்பல்' என்று  தலைப்பிட்டு அறியப் பெறுபவை. இருவரது காலமும் 10 ம் நூற்றாண்டு.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்