கணியன் பூங்குன்றனார், பக்குடுக்கை நன்கணியார்

வரிகள் இரண்டு புறநாற்றுப் பாடல்களில் உள்ளவை :
(1) "மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" ----
புறநானூறு 192 வது பாடல்; பாடியவர் - கணியன் பூங்குன்றனார்; பாடல் தொடக்கம் - "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." மாட்சியில் - செல்வம், பதவி போன்ற உயர்வுகளில்.
எடுத்த வரிகளின் பொருள் : செல்வம், பதவி போன்ற படிநிலைகளில் மேல் நிற்போரை நாம் (அறிவு சார் சமூகம்) வியந்து பணிதலும் இல்லை; கீழ் நிற்போரை இகழ்தலும்  (அல்லது உதாசீனப் படுத்துதலும்) இல்லை. This is best explained by Albert Einstein's famous quote " I speak to everyone the same way whether he is the Garbage Man or the President of the University".

(2) "இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க
இதன் இயல்பு உணர்ந்தோரே" ----------
புறநானூறு 194 வது பாடல்; பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்; பாடல் தொடக்கம் - "ஓர் இல் நெய்தல் இறங்க ஓர் இல்
ஈர்ந்தண் முனிவின் பாணி ததும்ப...."
பாடல் முழுப் பொருளையும் தொட்டுச் சென்றால்தான் எடுத்த வரிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.
முந்திய வரிகளில் :
ஒரு வீட்டில் சாவுக்கான இரக்க உணர்வை வெளிப்படுத்தி நெய்தல் பண் இசைக்க, அடுத்து ஒரு வீட்டில் மங்கல நிகழ்வை அறிவிக்க  குளிர்ச்சி தரும் முழவுப் பண் (மேளம்) இசைக்கிறது. ஒரு வீட்டில் காதல் வயப்பட்டோர் புணர்ந்து மகிழ்தலும், அருகமைந்த வீட்டில் பிரிவாற்றாது வருந்துதலும் நிகழ்கின்றன. படைத்தவன் பண்பில்லாதவன் போலும் !
எடுத்துள்ள வரிகளில்:
இவ்வுலக நடைமுறைகளைக் கண்டு 'இவ்வுலகம் இன்னாதது (கொடியது)'    எனத் தோன்றினாலும், இருக்கும் இனிமைகளைக் கண்டு வாழ்ந்து இன்புறுவதே இந்த  இயல்பு உணர்ந்த  விவேகமாகும்.
(பாடலில் 'அம்ம' என்பது வியப்பு குறித்த அசைச்சொல்). 

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்