On Ambedkar

இந்து என்ற பெயரில்  ஒளிந்திருப்பது, பிராமணிய சநாதனம்
என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார் அண்ணல் அம்பேத்கர். சநாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கும் மனுநீதி வழி நிற்பது.  இந்தியாவை எல்லா வகையிலும் சரியாகப் புரிந்தவர் அம்பேத்கர். உதாரணமாக, இந்த நிலத்தின் (ஒட்டுமொத்த இந்திய நிலத்தின்) பூர்வ குடிகள் என்றால் தமிழர்களைத்தான் சொல்ல முடியும் என்று கீழடிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளியை வைத்தே சொன்னவர் அம்பேத்கர். அத்துணைச் சான்றாண்மை படைத்தவர் நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெறற்கரிய பேறு.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்