Anti - North Occupation, Anti-Neet, Anti - JEE Coaching etc.,.

இது ஒரு பொய்யான பார்ப்பனியப் பரப்புரை. தமிழனின் சினிமா மோகம் என்றும் உள்ளதுதான். அதையும் மீறி அவன் கல்வியில் (இந்திய அளவில் மட்டும்) சிறந்து விளங்கியதும், விளங்குவதும் பதிவான உண்மை. பீகார், உ.பி., அரியானா போன்ற மாநிலங்களில் பிள்ளைகளை நகராட்சி, அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டு பொய்யான வருகைப் பதிவைப் பெற்று முழு நேரமும் coaching centreல் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது உங்களுக்குத் தெரியுமா? இங்கும் அதைப் பார்த்து IIT-JEE நுழைவுத் தேர்வுக்கு எட்டாம் வகுப்பிலேயே தயார் செய்யும் முட்டாள்தனம் இந்த சமூகத்திற்குத் தேவைதானா? JEE,NEET தேர்ச்சி பெறுவதுதான் வாழ்வின் உன்னத லட்சியமா? இதை வைத்து நம் பிள்ளைகள் படிப்பில் பின் தங்கி விட்டார்கள் என்பது எத்துணை மடமை? நம்மவர்களும் இப்போது coaching cultureல் தள்ளப்பட்டதால், இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இதிலும் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள் என்பது வேறு விஷயம்.
   இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழகத்தில்  ரயில்வேயில் சுமார் 1650 பணியிடங்களில் அநேகமாக 1500 இடங்களில் வடநாட்டான் வந்தது எப்படி? அதில் தமிழ் மொழித்தாள் உண்டு. தமிழ் தெரியாதவன் 50க்கு 48 வாங்குவது எப்படி? தபால் துறையில் நமது கிராமப்புறத்திலும் தமிழ் தெரியாமல் பீகார்க்காரன் இன்று வந்தமர்ந்து நம் மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவது எப்படி?
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வேற்று மொழிக்காரர்கள் வந்து கலந்தது தமிழ் மண்ணில்தான். சுமார் 400 வருடங்களுக்கு முன் வந்து கலந்த தெலுங்கர்களும், சௌராஷ்டிரர்களும் நமது மரியாதைக்கு உரியவர்கள். நம்மிடம் கரைந்து போனார்கள். ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த நன்றி கெட்ட ஆரியக் கூத்தாடிகள்  தேவ(!)பாடையைத் தூக்கித் திரிவதும், நம் இன அடையாளங்களை அழிக்க முனைவதும் தொழிலாகக் கொண்டவர்கள். இவ்வாறானவர்களின் ஒரு பதிவே மேற்குறித்தது. திராவிட இயக்கப் பெரியாரையும் அண்ணாவையும் பழித்த மிலேச்சர்களின் நீளமான பதிவுக்கு சுருக்கமான பதிலை எப்படித் தருவது? எல்லாம் செய்துவிட்டு 'சாதி பற்றியெல்லாம் எங்கே பேசினோம்' என்று ஒன்றும் தெரியாதவர்கள் போல் கேட்பார்கள்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்