Anti-Sanghi 1

இந்தியாவில் பிறந்த எந்த இசுலாமியருக்கும் பாதிப்பில்லை என்று மட்டுமே பாஜகவும் அடிமை அதிமுகவும் முழங்குகின்றன. வெளியிலிருந்து (2014 க்குப் பிறகு) வந்தவர்களை விரட்ட முடிவு செய்த பின் அதில் மதப்பாகுபாடு ஏண்டா என்ற கேள்விக்கு எவனும் பதில் சொல்லத் தயாரில்லை. இதை ஏற்றுக் கொண்டால், இப்பாகுபாட்டை எல்லா விஷயங்களிலும் உன் பாசிசம் கொண்டு வரும் என்பது எங்களுக்குத் தெரிவதாலேயே போராடுகிறோம்.  'எந்தவொரு மாற்றத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வரக்கூடாது; அதைப் பிரித்து பகுதி பகுதியாக அமல் படுத்த வேண்டும். மக்கள் உணர்வதற்குள் காலம் கடந்து விடும்' என்று இவர்களுக்காகவே வெளிப்படையாக ஓதியவன்தான் ஹிட்லர். இப்போது இந்துத்துவாவாதிகள் எப்படி இந்த ஆட்சியாளர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்களோ, அப்படியே நாஜிக்கள் ஹிட்லரைத் தூக்கிப் பிடித்தார்கள். இவர்களின் அழிவும் அப்படியே நிகழும்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்