Snub 3
அங்கதம் தமிழில் இன்னும் சிறப்பாக வரும் என நினைக்கிறேன். அந்த வீடியோவில் உள்ள பதிவை ஒருவர் இவ்வாறு எடுத்துக் கொண்டார்; அதாவது அலுவலகத்தில் உள்ள வரை பதவி, பதவிசு போன்ற இழவுகளைக் கட்டி மாரடிக்கலாம் என்று. நாம்தான் அலுவலக வளாகத்திலேயே வாழ்கிறோமே! அதனால் 24 மணி நேரமும் அந்த இழவாகவே வாழலாம் என்று நினைத்தார். விளைவு இரவில் உறக்கம் வராமல் தோன்றும் கற்பனையெல்லாம் காலையில் சுற்றறிக்கையானது. அவரைப் போன்றே ஏதாவது அதிகாரத்தை எதிர்பார்த்த கூட்டம் அதைக் கொண்டாடியது. தேவைப்பட்டால் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு அக்கற்பனைகளுக்கு அங்கீகாரமும் தந்தது. கதை இப்போதைக்கு முடிந்தது.
Comments
Post a Comment