Snub 7
நல்வரவாகட்டும். இனி வழக்கமான காட்சிகள் அரங்கேறக் காணலாம். அதிகாரமே உணவாகக் கொள்ளும் விந்தை மனிதர் (அற்பர் என்பதன் இடக்கரடக்கல்) புதிய நிர்வாகத்தின் அருட்பார்வை வேண்டி சுற்றிச் சுற்றி வருவர். இதுகாறும் துதி பாடிய சிலர் நேற்றைப் பழித்து இன்றைப் புதிய துதியோடு தொடங்குவர். கோயிலில் சாமி மாறும். பூசாரிகள் மாறுவதில்லை. காட்சியும் மாறுவதில்லை. (படித்த?) பட்டதாரிச் சமூகத்தில் இந்த இழிநிலை. படித்தவன்தான் பாதகம் செய்வானோ? ஒழுங்காப் படிங்கடா என்று இவர்களுக்கு யார் சொல்வது?
Comments
Post a Comment