நனி நாகரிகம், நயத்தக்க நாகரிகம் - நற்றிணை, குறள்

தினம் ஒரு தமிழ்ப் பாடல்
                          - சுப.சோமசுந்தரம்

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்"  ------நற்றிணை : பாடல் 355, வரிகள் 6-7.

பாடற் பொருள் :-
முன்னைக் காலத்தில் இருந்தே நட்புறவு கொண்டோர் நஞ்சையே கொடுத்தாலும், நாகரிகம் (etiquette, benignity) அறிந்தோர் அதனை ஏற்று உண்டு அமைவர்.

மேல் விளக்கம் :-
பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லையே என நாம் நினைக்கலாம். பன்னெடுங்காலம் தேர்ந்து தெளிந்த நட்பின் சிறப்பும், தேர்ந்து தெளிதலின் அவசியமும் பாடலின் உள்ளூடாய் அமைந்தது எனலாம். இஃது அகப்பாடலின் உள்ளே, தகைசால் பண்பினை எடுத்துக்காட்டவே கையாளப் பட்டுள்ளது. இதனையே முதற் பொருளாய் வைத்து 'கண்ணோட்டம்' எனும் அதிகாரத்தில் வள்ளுவன்,
"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"என்பான். காலத்தால் முந்திய நற்றிணையை அதே 'நாகரிக' சொல்லாட்சியுடன்  வள்ளுவன் எடுத்தாண்டமை 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தகைமை. நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவனின் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்