தாயுமானவர் 2
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"சுக்கிலமும் நீரும் சொரியமலமும்
நாறு முடற்
புக் குழலும் வாஞ்சை
இனிப் போதும் என்பது எந்நாளோ ?"
-------- தாயுமானவர்.
பாடற் குறிப்பு :-
தாயுமானவர் பாடிய கண்ணிகளில் 'எந்நாள் கண்ணியில்' நான்காவது பகுதியான 'யாக்கையைப் பழித்தல்' இல் முதற் பாடல். யாக்கை என்பது உடல். யாக்கையைப் பழித்தால் - உடலை வெறுத்தல்.
பாடற் பொருள் :-
"விந்தும் (சுக்கிலம்) சிறுநீரும் மலமும் சொரிந்து நாறும் உடலுடன் உழலும் பற்று (வாஞ்சை) - உடலைப் பேணும் பற்று - இனி போதும் என்னும் மனநிலை பெறுவது எந்நாளோ ?" என்று ஏங்குகிறார் தாயுமானவர்.
மேற்குறிப்பு :-
தரப்பட்ட பாடலுக்குப் பொருள் எழுதியுள்ளேன். மற்றபடி தாயுமான சுவாமிகளின் யாக்கையைப் பழிக்கும் கோட்பாட்டில் உடன்பாடு உண்டு என்ற பொருளில்லை.

Comments
Post a Comment