On Telugu speaking people in Tamilnadu
தெலுங்கர்கள் பெரிய அளவில் கிருஷ்ண தேவராயர் காலத்திலும், திருமலை நாயக்கர் காலத்திலும் தமிழ் மண்ணில் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் அவர்கள் இந்த மண்ணில் கலந்து, நம் மொழியில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளத்தை இழக்க வேண்டும் என்று தமிழினம் விரும்புவதில்லை என்றாலும் கூட, அவர்கள் சூழலுக்குப் பழகினார்கள். தங்கள் பரம்பரையின் எச்சமாக, தங்கள் வீடுகளில் ஏதோ உடைந்த தெலுங்கை பேசிக் கொள்கிறார்கள், அவ்வளவே. சுமார் நானூறு ஆண்டுகளில் தமிழர்களாகவே ஆனார்கள். தமிழுக்கு வளமை சேர்த்தார்கள் - தமிழில் சாகித்ய அகாதமி விருது வாங்குகிற அளவிற்கு. எனவே இந்த மண் எனக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவு அவர்களுக்கும் சொந்தம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்கள், மூளைச்சலவை செய்து தமிழர்களைத் தமது சடங்கியல்களுக்கு மாற்றினார்கள். மூளைச்சலவைக்குத் தமிழன் தயாராக இருந்ததும் இருப்பதும் அவனுக்கான அவலம். செத்த மொழியைத் தமிழில் கலந்து ஆக்கங்கெட்ட நடைக்கு மணிப்பிரவாள நடை என்றெல்லாம் பெயர் கொடுத்தார்கள். உறவாடிக் கெடுத்தவர்கள் இன்னும் தமிழர்களாக ஆகவில்லை. தமிழ் அடையாளத்தையே இன்றும் அழிக்க முனைகிறார்கள்.
Comments
Post a Comment