Snub 6

கதை இரண்டு. ஒரு நாட்டில் ஒரு மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாராம். என்னது? மன்னராட்சியில் தேர்தலா என்று லாஜிக்கெல்லாம் பேசப்படாது. கதை சொன்னா நல்ல பிள்ளையா கேட்கணும். அவர் சாதுவாகத் தெரிந்தார்; நல்லவராயிருக்கலாம்; கனவு மெய்ப்பட ஆசை. சில காலங்கள் முன்பு தகப்பன் சாமியாய் வந்த மன்னர் ஒருவர் தாமே முடிவெடுக்காததால், அவருக்காக முடிவெடுக்க ஒன்றிரண்டு அல்லக் கைகள் இருந்தன. அவை மக்களுக்கு அல்லவை செய்தலையே குலத் தொழிலாய்ச் செய்து வந்தன. அந்த அல்லக் கைகள் தற்போதைய மன்னரைக் கண்டதும்  மீண்டும் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தன. அடேய்! முதல் நாளிலேயேவா ? அவர்கள் எக்ஸ்ரே கண்ணில் கொள்ளி வைக்க. அவர்களுக்கெல்லாம் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று சபிப்பதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே.
கதை முற்றுப் பெற்றது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் நீங்கள் நல்ல பிள்ளை; உங்கள் பெற்றோர் உங்களை நல்ல வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். உடனே பிரச்சினையில்லாத பதிவுகளுக்குச் செல்லவும்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்