கணியன் பூங்குன்றனார்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
நோதலும் தணிதலும்
அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதெனமகிழ்ந்தன்றும்
இலமே
முனிவின் இன்னாதென்றலும் இலமே"
_ புறநானூறு
புறநானூறு பாடல் 192; பாடியவர் கணியன் பூங்குன்றனார். இப்போது எடுத்தவை பாடலின் தொடக்க வரிகள். இப்பாடலின் சிறப்பு - எளிய வரிகள்; சீரிய கருத்துக்கள்.
உலகோர்க்கான சிறந்த மாண்புகள் சிலவற்றைக் கூறுகிறது பாடல். இனி எடுத்த வரிகளின் பொருள் :
(1) உலகம் அனைத்தும் எம் ஊரே ; உலகோர் அனைவரும் எம் சுற்றத்தாரே (*கேளிர்)
(2) நமக்கான தீமையும் நன்மையும் பிறர் தந்து வருவதில்லை ; அவற்றிற்கு நாமே காரணம் (Never try to blame others for our miseries)
(3) நாம் துன்புறுதலும் (நோதலும்), அத்துன்பம் நீங்குதலும் (தணிதலும்) அது போலவே (நாமே காரணி).
(4) இவ்வுலகில் சாதல் ஒன்றும் புதிய நிகழ்வல்ல (* புதுவது அன்றே). ஆகையால் இன்பம் நேரும்போது வாழ்வு இனிமையானது என்று மகிழ்வதும், துன்பம் நேரும் போது அவ்வாழ்வு இன்னாதது என்று வெறுப்பதும் நம்மிடம் இல்லை (இருக்கக் கூடாது என்பதை 'ஏற்கெனவே நம்மிடம் இல்லை' என்று நேர்மறையாகச் சொல்வதாய்க் கொள்ளலாம் - Thanks for not smoking போல). மனதின் composure ஐ வலியுறுத்துவது இவ்வரி.

Comments
Post a Comment