Anti-Brahminism 2

ஆதிக்க மனப்பான்மை  தனிமனிதனிலும் உண்டு என்பதை ஏற்கிறேன். சமூகம் சார்ந்து இல்லை என்பதை நம்ப விரும்புகிறேன். ஒரு காலத்தில் நம்பவும் செய்தேன். ஆனால் என் விருப்ப சிந்தனைக்காக (wishful thinking), குழு மனப்பான்மை (Mass mentality) என்ற நிதர்சனத்தை நான் ஏன் தவிர்க்க வேண்டும்? சமூக நிலை தெரிந்தால்தான் சமூகத்தில் நம் கருத்துக்களை சரியாக நிலைப்படுத்த முடியும். உதாரணமாக என் இடதுசாரித் தோழர்களிடம், "அதெப்படி எந்த விஷயத்திலும் நீங்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்? அதிகாலையிலேயே தீக்கதிரை மனப்பாடம்  செய்து விடுவீர்களோ?" என்று கிண்டலடித்திருக்கிறேன். அதுபோல் பார்ப்பன ஆதிக்க சக்திகளில் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்று சொன்னாலே விதி எது என்பது தெளிவு. An exception proves the rule; it disproves the rule only in mathematics.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்