Anti-Sanghi 2

சங்கிகளுக்கு இன்று பொதுவான ஒரு நடைமுறை வழக்கம் உண்டு (behaviour pattern) - அது அவர்களது ஷாகாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். WhatsApp குழுமங்களில் வெறித்தனமாகப் பதிவிடுவார்கள். வேறு எந்த கட்சிக்காரர்களும் தங்கள் கட்சி அரசியலை முன்னெடுப்பதில்லை. அதனால் எல்லாக் குழுமங்களிலும் சங்கி அரசியல், அதற்கெதிரான அரசியல் (anti- Sanghi) என்று இரண்டு ரகம்தான் உண்டு. சங்கிப் பதிவுகளில்  இப்போது தங்கள் தரப்பு நியாயம் தமிழகத்தில் எடுபடாது என்பதால், அவர்களை மிரட்டும் இரண்டு பேரை மட்டும் குறி வைப்பார்கள். ஒன்று ஸ்டாலின் -  கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் அவர் முன்னிலை வகிப்பதால். இரண்டு பினராயி விஜயன் -  அவர் பரவலாக அறிவார்ந்த சமூகத்தினரால் போற்றப் படுவதாலும், கேரள மக்களின் ஏகோபித்த ஆதரவோடு திகழ்வதாலும். இந்த வரைமுறைக்குள் தெளிவாக வரும் நீங்கள் ஏன் முக்காடோடு வெளியே வர வேண்டும்? முக்காடை விலக்குங்கள்.  நேர்மையாவது மிஞ்சும்.நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள். எங்களுக்கு ஸ்டாலின் மீது எந்த அபிமானமும் கிடையாது. சங்கி அரசியலைத் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் தடுக்க நாங்கள் எடுக்கும் ஆயுதமே ஸ்டாலின். ஏனெனில் 'நாஜி' என்பதற்கு இந்திய மொழிபெயர்ப்பே 'சங்கி'. நல்ல அரசியலுக்கு எங்களின் எடுத்துக்காட்டு பினராயி விஜயன். அவரை எதிர்க்கும் போதே தெரிகிறது உங்கள் அரசியல் தரம்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்