சிலைகொள் நாணின் - சீவக சிந்தாமணி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல்

                     -  சுப.சோமசுந்தரம்


"சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பின் அவர்தம் இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன் மலைகொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்".

----சீவக சிந்தாமணி, பாடல் 1413.


பாடல் விளக்கம் :- 

(பதுமையைப் பிரிந்த சீவகன்) "மலைசூழ்ந்த கானகத்தின் வழியே உற்சாகமாகச் செல்கிறான்" ("மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்"). எத்தகைய சீவகன் என்று திருத்தக்க தேவர் நீண்ட விளக்கம் தருகிறார் : "வில்லில் பொருத்திய நாண்  போன்று (சிலைகொள் நாணின்) உறுதியான கற்புத்திறம் வாய்ந்த (தீராத்திருந்து கற்பின்) அவளது (அவர்தம் - பதுமையின்) இலைகளும் மலர்களும் கொண்டு அணிந்த மாலையினைத் (இலைகொள் பூந்தார்) தனது மார்பினால் உழுத இன்ப வருத்தம் நீங்க (to relax a bit from the joyful pain) சற்று விலகி, அவளது முலையின் கண்களைக் கண்ணாரக் கண்டு ரசித்து (முலையின் கண்கள் கண்ணின் எழுதி) மீண்டும் தழுவும் (முள்கும்) பேராற்றல் மிக்கவன் (மொய்ம்பன்)".

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்