மனிதத்தின் அழகியல் அழகேசனார்

மனிதத்தின் அழகியல் அழகேசனார் - சுப.சோமசுந்தரம் பேரா. அழகேசன் அவர்களுடன் பணிசெய்யக் கிடைத்தமை யாம் பெற்ற பேறு எனில், அவ்வாய்ப்பு குறுகிய காலத்திற்கே கிட்டியமை எம் பெருங்குறை. அந்நல்லாரைக் காண்பதும், நலம் மிக்க அவர்சொல் கேட்பதும், அவர்தம் புகழுரைப்பதும், அவரோடு இணங்கி இருப்பதும் நம் அனைவருக்கும் நன்றே. ‘நல்லார்’ எனும் அவர் பண்பினையும் ‘சான்றோர்’ எனும் அவர் சீர்மையினையும் சீர்தூக்குங்கால், முன்னம் பேசப்பட வேண்டியது அவர்தம் பண்பே...