திராவிடம் - பேரா.த.செயராமன்
திராவிடம் - பேரா.த.செயராமன் மனோன்மணியம் சுந்தரனார் மிகச் சிறந்த தமிழறிஞர்; முன்னோடியான மெய்யியலாளர். மொழியியல் அறிவும், மாந்தவியல் அறிவும், வரலாற்று அறிவும், கல்வெட்டியல் அறிவும், ஆராய்ச்சியும், இவை குறித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பும் உள்ள, அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட பேரறிஞர். மறைமலை அடிகள் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்வதற்கு பரிந்துரையும் வழங்கியவர் சுந்தரனார் தான். தமிழ் இலக்கியங்களில் உள்ள "தமிழ்நாடு " குறித்த பதிவுகள் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் மனோன்மணியம் நாடகத்தில் எழுதியுள்ள தமிழணங்கு வாழ்த்தில் "திராவிட நல் திருநாடு" என்று ஏன் குறிப்பிட்டு இருக்கிறார்? அவர் என்ன பொருளில் குறிப்பிடுகிறார் என்பதே அறியாமல் சிலர் விமர்சிக்கிறார்கள். 1890 's என்பது திராவிட இன உணர்வு மிகுந்தவளர்ச்சி பெற்ற காலகட்டம். 1892 -இல் இப்பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதுகிறார். 1890-இல், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபாவை உருவாக்குகிறார...