Posts

Showing posts from August, 2026

கண்டனென் கற்பினுக்கு அணியை

 கண்டனென் கற்பினுக்கு அணியை                பொதுவாக ஒரு அலுவல் மேற்கொண்டு முயற்சி செய்தவர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ திரும்பி வந்து நம்மிடம் அச்செயல் நிகழ்வு பற்றிக் கூறத் தொடங்குகையில், "சென்ற காரியம் காயா பழமா என்று முதலில் சொல்" என்று அவரிடம் கேட்பது இயல்பான ஒன்று. அவரே முடிவினை அறிவித்துவிட்டு நிகழ்வு பற்றி நீட்டி முழக்குவது சிறப்பு. அதைத்தான் கம்பனின் அனுமன் செய்கிறான். அன்றைய உபந்நியாசகர்கள் முதல் இன்றைய சொற்பொழிவாளர்கள் வரை இலங்கை சென்று மீண்ட அனுமன் ராமனிடம், "கண்டேன் சீதையை" (கண்டனன் கற்பினுக்கு அணியை) என்று ஆரம்பித்த விதத்தை அழுத்தமாகத் சொல்லத் தவறுவதில்லை. அதிலும் " 'சீதையைக் கண்டேன்' என்றில்லாமல் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி ராமனை முதலில் ஆறுதல் படுத்தினான் அனுமன்" என்றும் சிலாகிப்பர். "கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண்டிரை அலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும் பண்டுள துயரும் என்றனுமன் பன்னுவான்" பொருள் : கற்பினுக்கு அணியினை (சீதையை) என் கண்களால் கண்டேன் -  தெள்ளிய அலைகளை உடைய கடல் (தெண் த...

அழகியல் ஓர் உயரியல்

 பாலகாண்டத்தில் கோசல நாட்டின் மருத நில வருணனையில் நம்மைக் கிறங்க அடிக்கிறான் கம்பன் : "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ" பொருள் : குளிர்ச்சி பொருந்திய நிலத்தில் (தண்டலை - தண் தலை) - அஃதாவது சோலையில் - மயில்கள் ஆடுகையில், தாமரையாகிய விளக்குகள் ஒளிர்ந்து நிற்க, மேகங்கள் (கொண்டல்கள்) முரசொலிக்க (முழவின் ஏங்க), குவளையாகிய கண்கள் விழித்து நோக்க, தெள்ளிய நீரலைகள் (தெண்டிரை - தெண் திரை) திரைச் சீலையாய்த் திகழ (எழினி காட்ட), தேனைப் பிழிந்தெடுத்த (தேம் பிழி) இனிமை(சுவை)யொத்த மகர யாழின் இசை போன்று வண்டுகள் இனிமையாய்ப் பாட, மருத நிலமகள் வீற்றிருக்கின்றாள்.               கம்பனின் மேற்கூறிய இயற்கை வருணனை சீவக சிந்தாமணியின் கேமசரியார் இலம்பகத்தில் 1417 ஆம் பாடலை நினைவுறுத்துகிறது : "சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா வனையலாகா உருவ நோக்கி மைந்தற் கிரங்கி இனைவ போலும் வரையின் அருவி ......