ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம் - புறநானூறு - ஔவை - அதியமான்
தினம் ஒரு தமிழ்ப் பாடல் : பலநாளும் தலைநாளும்
- சுப.சோமசுந்தரம்
"ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்......."
--------புறநானூறு பாடல் 101.
(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது)
பாடற் குறிப்பு:
பாடியவர் ஒளவையார்; பாடப்பட்டவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி. இப்பாடலில் அதியமானின் விருந்தோம்பல், விருந்தருமை ஒளவையால் போற்றப்படுகிறது.
பாடற் பொருள் :
ஒருநாள் சென்றோம் இருநாள் சென்றோம் என்றில்லை; பல நாட்கள் இருந்து பழகி, பலரொடு சென்றிருந்தாலும், முதல்முறை போலவே எம்முறையும் விருப்பத்துடன் அன்பு பாராட்டிப் பேண வல்லவன்.
பின் குறிப்பு : இக்காலத்தைப் போல் நெடிய பயண வசதி இல்லாமையால், அக்காலத்தில் விருந்தோம்பல் சமூகத்தில் தேவையான அங்கமானது. எனவே அது அறமாகக் கொள்ளப்பட்டது ஒருபுறம். இங்கு வந்தவர் சான்றாண்மை மிக்கவர். வரவேற்பவன் மன்னன். எனவே விருந்தோம்பல் எனும் அறத்திற்கும் மேலாக அன்னார்க்கு உரிய சிறப்புச் செய்தலும் ஈண்டு விருந்தோம்பலின் அங்கமானது. Not just treating a Guest, it's treating a Guest of Honour.

Comments
Post a Comment