யாண்டு பலவாக நரையிலவாகுதல் - புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
----புறநானூறு, பாடல்191; பாடியவர் : பிசிராந்தையார்.
பாடற் குறிப்பு :
பிசிராந்தையார் முதுமை வந்தபோதும் சுறுசுறுப்புடனும் இளமைத் தோற்றத்துடனும் திகழ, அதன் காரணத்தை ஆங்காங்கே மக்கள் வினவ, அவர் முன்வைக்கும் காரணங்களே இப்பாடல். நிறைவான வாழ்வே இளமையின் ரகசியம் என்பதே அவர் விடுக்கும் செய்தி.
பாடற் பொருள் :
ஆண்டுகள் பலவானாலும் (வயதானாலும்), தலை நரை இன்றி (இளமையொடு இருத்தலுக்கான குறியீடு) எங்ஙனம் உள்ளீர் (யாங்கு ஆகியர்) என்று வினவுவீர்கள் என்றால், "மாட்சிமை பொருந்திய மனைவி ( மாண்டவென் மனைவி) வாய்க்கப் பெற்றேன். என் மக்கள் (பிள்ளைகள்) நிரம்பியவர்கள் (அறிவிலும் பண்பிலும்). என் இளையோர் (என் ஏவல் ஏற்போர் - ஏவலர், இளைய சுற்றத்தினர்) யான் எண்ணியவாறு அமைந்தனர் (கண்டனையர்). வேந்தன் அல்லவை செய்யாது, நல்லவை செய்து குடிகளைக் காப்பவன். மேலும் (அதன் தலை), அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ச்சியடைந்து, அடக்கம் முதலிய நற்பண்புகள் வாய்க்கப் பெற்ற (ஆன்று அவிந்து அடங்கிய) கொள்கைப் பிடிப்புள்ள சான்றோர் பலர் வாழும் ஊர் எம்மூர்". (எனவே எனக்கு எவ்வாறு நரை தோன்றும், முதுமை ஏற்படும் ?)
பின் குறிப்பு :
என்ன வாய்த்தாலும், அதனை உணர்ந்த நிறைவான வாழ்வின் சிறப்பைக் கூறும் பாடல். 'இவையெல்லாம் வாய்த்தால்தான்' என்பதல்ல செய்தி.

Comments
Post a Comment