அகவன் மகளே ! அகவன் மகளே ! - குறுந்தொகை
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!"
-------குறுந்தொகை, பாடல் 23.
பாடற் குறிப்பு :
பாடியவர் - ஒளவையார்.
குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி.
பாடற் பொருள் :
அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக !
பின் குறிப்பு :
(1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம்.
(2) தோழியைப் பொறுத்தமட்டில் தான் சொல்லத் தயங்குகிற தலைவியின் காதற் செய்தி, குறி சொல்பவள் மூலம் தலைவியின் தாயிடமும் செவிலித்தாயிடமும் சென்றடைய வேண்டும் என நினைக்கிறாள். கட்டுவிச்சி வழக்கம் போல் குறிஞ்சித் தலைவன் சேயோனின் நெடுங்குன்றச் சிறப்பினைப் பாடியிருப்பாள். அவள் குறி அறிந்து நம் தலைவனின் நெடுங்குன்றத்தைப் பாடியதைப் போல, தோழி நாடகமாடுகிறாள், "முன்னர் பாடிய 'அவரது' குன்றம் பற்றிப் பாடு". இதன் மூலம் 'அவர்' பற்றிய குறிப்பைத் தாய்க்கும் செவிலிக்கும் தர முயற்சிக்கிறாள் தோழி.

Comments
Post a Comment