அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் ......- புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே"
----புறநானூறு 112
பாடற் குறிப்பு :
பாடியோர் : பாரி மகளிர்.
மூவேந்தர் சூழ்ச்சியால் மன்னன் பாரி போரில் வெல்லப்பட்டு மாய்ந்தான். அவனது பறம்பு மலையும் அப்பகைவரால் கொள்ளப்பட்டது. பாரி மகளிர் இருவரும் பாரியின் உயிர் நண்பர் புலவர் கபிலரின் பொறுப்பில் இருந்த போது கையறு நிலையில், தந்தையை இழந்து தவிக்கும் தம் நிலைக்கு வருந்திப் பாடுவது; அவலச் சுவை ஏந்தி வரும் பாடல்.
பாடற் பொருள் :
அன்றொரு நாள் அந்த வெண்ணிலா ஒளியில், எம் தந்தை எம்முடன் இருந்தார் ; எமது குன்றும் (பறம்பு மலையும்) பகைவர் கொள்ளவில்லை. இன்றைய தினம் இந்த வெண்ணிலா ஒளியில், வென்று ஒலிக்கும் முரசினைக் (வென்று எறி முரசு) கொண்ட வேந்தர் எம் குன்றையும் கொண்டார்; எம் தந்தையும் இலர் (உயிருடன் இல்லை).
பின் குறிப்பு :
எளிமையான வரிகளைக் கொண்டு உணர்ச்சி ததும்பும் பாடல். இலக்கிய உலகிலும், பாமர மக்களிடமும் (திரைப்பாடல்களில் கூட இப்பாடலின் முதல் வரி அதிகம் எடுத்தாளப் பட்டதால்) பிரபலமானது. பள்ளிப் பருவத்திலேயே மாணாக்கர் படித்திருக்கக் கூடியது.

Comments
Post a Comment