பாரி பாரி என்று பல ஏத்தி - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                       - சுப.சோமசுந்தரம்

"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
  ---- புறநானூறு 107.

பாடற் குறிப்பு :
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : பறம்பு நாட்டு மன்னன் வள்ளல் வேள் பாரி.
இப்பாடலில் பாரியின் வள்ளன்மையைத் திறம்பட உலகோர்க்கு  உரைக்கிறார் கபிலர். எளிய வரிகளில் வளமான பொருள்   இப்பாடலின் சிறப்பு.

பாடற் பொருள் : பாரி பாரி என்று பலவாறு உயர்த்தி, வள்ளன்மைக்குப் பாரி ஒருவனையே செவ்விய மொழி ஆளுமை பெற்ற புலவர் பெருமக்கள் (செந்நாப் புலவர்) புகழ்வர். வள்ளன்மையால்   உலகைக் காக்க (புரப்பது) பாரி ஒருவன் மட்டுமல்லன், மழையும் (மாரியும்) இங்கு உண்டே !

பின் குறிப்பு :
உலகில் எடுத்துக்காட்டாய் நிற்கும் நட்புகளில் கபிலர் - பாரி நட்பும் ஒன்று. இப்பாடலில், "பாரி மட்டும்தானா வள்ளல் ? மழையும் தான் உண்டு" என்று பாரியை இகழ்வது போல் தொனிக்கிறது; ஆனால் உண்மையில், பாரியின் வள்ளன்மைக்கு நிகர் மழையே என்று மறைமுகமாகப் புகழ்கிறார். ஆதலின் ஈது 'இகழ்தல் போல் புகழும்' வஞ்சப்புகழ்ச்சியானது.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இப்பாடல் புறநானூறு 107.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்