வருவையாகிய சின்னாள், செல்லாமை உண்டேல் - நற்றிணை, குறள்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"வருவை யாகிய சின்னாள்
வாழாளாதல் நற்க றிந்தனை சென்மே"
----நற்றிணை 19 வது பாடல் ஈற்றடிகள்.
பொருள் கருதி சீர் பிரித்து :
"வருவை ஆகிய சிலநாள்
வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே".
பாடற் களம்:-
தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன், சில நாட்களில் திரும்பி வருவதாக அவளைத் தேற்றி, செல்ல முற்படுகிறான். தலைவியின் தோழி தலைவனிடம் தலைவிதன் நிலை பற்றி எடுத்துரைக்கிறாள்.
பாடற் பொருள்:-
நீ மீண்டும் வருகிற அந்த சில நாட்கள் கூட (பிரிவாற்றாமையால்) தலைவி வாழ மாட்டாள் என்பதை நன்கு அறிந்து செல்வாயாக !
பின் குறிப்பு :-
பிரிவாற்றாமையினால் தலைவி உடல்நலனும் மனநலனும் அழிதல் பொதுவாக இலக்கியங்களில் பேசப்படும் ஒன்று. உயிர் வாழாள் என்பது அருகியே வருவது.
வள்ளுவத்தில் அதிகாரம் 'பிரிவாற்றாமை' யில்
"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை"
என வரும் முதற் குறள் நமது நற்றிணைப் பாடலுடன் நோக்கற்பாலது.
(எனக்குரை - எனக்கு உரை ; வாழ்வார்க்குரை - வாழ்வார்க்கு உரை)
பிரிந்து செல்லும் தலைவன் சிலநாள்தானே பிரிவு என்றெல்லாம் தேற்றியும் தலைவி தேறவில்லை. பிரிந்து செல்லும் நாளில் எல்லோரிடமும் விடை பெற்று, தலைவியிடம் வருகிறான். தலைவி கூற்றாக வரும் குறட் பொருள் :
(மனம் மாறி நீ) செல்லவில்லை என்றால் அச்செல்லாமை பற்றிய செய்தியை எனக்கு உரை. மற்றபடி (சீக்கிரம் வந்துவிடுவேனே என்ற) உன் வல்வரவு பற்றிய செய்தியை, நீ வரும்போது வாழப் போகிறவர்களுக்கு உரை. (வல்வரவு என்ற சொல்லாடல் முதலில் வள்ளுவத்தில்தான் பார்க்கிறேன். அவன் மீண்டும் வரப் போகிற வீடு அவள் இல்லாத இழவு வீடு என்பதால் அவனது வரவு வல்வரவாம் !).

Comments
Post a Comment