நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் - திருவருட்பயன்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்"
--------திருவருட்பயன், பாடல் 9.
திருவருட்பயன் உமாபதி சிவாச்சாரியாரால் அருளப் பெற்றது.
அருஞ்சொற்பொருள் :
நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று 'மலை' என்பதற்குக் காரணப் பெயர் ஆனது; ஆகவே வேங்கட மலைக்கு வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு அருணாசலம் எனவும் வழக்கு).
பாடற் பொருள் :
தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலமிக்கவன். அவன் எந்த அசைவும் (இங்கு 'ஒரு பக்க சாய்வும்' எனக் கொள்ளலாம்) இல்லாதவன் (சலம் இலன் - அசைவு இல்லாதவன் - நடுநிலையாளன்). அவன் பெயர் சங்கரன்.
பின் குறிப்பு :
முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே முரண் இருப்பது போல் தோன்றுவது வெறும் தோற்றமே. இரண்டாவது வரியினாலேயே முதல் வரி விளக்கம் பெற்றது. இரண்டாவது வரி,"Impartiality, thy name is Sankaran" என்று அறிவிப்பதால், முதல் வரி பின்வருமாறு பொருள் ஆகிறது : அவனை நினையாதார்க்கு அவனது நலம் தெரிவதில்லை ; அவனையே நினைந்தாரக்கு நடக்கும் நல்லவை யாவும் அவனாலேயே என உணரப்படும். அஃதாவது உண்டு என்பார்க்கு உள்ளதாகத் தெரிந்து, இல்லை என்பார்க்கு இல்லாமல் போவதைப் போல, இறைவன் நல்லனாகவோ நலமில்லாதவனாகவோ தெரிதல் மனித மனம் சார்ந்த நிலை. ஆனால் அவனைப் (சங்கரனைப்) பொறுத்தமட்டில் அவன் வேண்டுதல், வேண்டாமை இல்லாத நடுநிலையாளன்.
இப்போது ஒரு கேள்வி எழலாம் - பின் ஏன் அவனை நினைந்துருக வேண்டும் ? அதற்கான பதில் - அது பக்தனின் மன நிறைவு பற்றியது.

Comments
Post a Comment