கார்காலம் வரவில்லை எனத் தலைவியைத் தோழி தேற்றியது - நற்றிணை
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"மதியின்று
மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ வாகலின் மலர்ந்தன பலவே".
----நற்றிணை பாடல் 99, வரிகள் 6 - 10.
பாடற் குறிப்பு :
பாடியவர் : இளந்திரையனார்.
மழை பெய்து செடி, கொடிகள் பூத்தமையால் கார்காலம் வந்ததாய்க் கருதி, அப்பருவத்தில் ஊர் திரும்பும் தலைவன் வரவில்லையே எனத் தலைவி கவலை கொள்கிறாள். "இது பருவம் தப்பிய மழை. கார்காலம் வரவில்லை. எனவே வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றும் பாடலின் சில வரிகள்.
பாடற் பொருள் :
அறிவில்லாது (மதியின்று) மறந்து போய்க் கடல் நீரை முகந்து நிறைசூலுற்ற (கமஞ்சூல்) மேகம் (மாமழை), பொறுக்க மாட்டாது பெய்த (இறுத்த) பெருமழையைக் (வண்பெயல்) கண்டு, கார்காலம் என்று மயங்கிய (அயர்ந்த) உள்ளத்தோடு, தேர்ந்து தெளியும் ஆற்றலின்றி (தேர்வில) பிடவமும், கொன்றையும், கோடலும் (மலர் வகைகள்) அறியாமையால் (மடவவாகலின்) மிகுதியாய் (பலவே) மலர்ந்தன.
பின் குறிப்பு :
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி 'பருவம் அன்று' என்று தேற்றுவது குறுந்தொகைப் பாடல்கள் 66, 251லும் காணலாம். குறுந்தொகைப் பாடல் 94 ல், பருவம் கண்டு தலைவி மயங்கினாளோ எனக் கவலையுறும் தோழிக்குத் தலைவி, "நானா பருவம் கண்டு மயங்குவேன்?" என்று உரைப்பதாய் வருகிறது.

சிறப்பான விளக்கம் . நன்றி . வாழ்க தமிழ் .
ReplyDelete