சிங்கப்பூர் சந்துரு கேள்வியும் என் பதிலும் - 1

சந்துரு கேள்வி :
 ஐயா. உங்களிடம் இரு கேள்விகள்.
1. பெளத்தம் தமிழை அழித்து சமஸ்கிருதம் வளர்க்க முயற்சி செய்ததா?
2. சமண மதத்தில் சாதிகள் இருந்தனவா?
ஆழ்வார்களும். நாயன்மார்களும் இல்லாவிட்டால் தமிழ் அழிந்திருக்கும் என  சிலர் சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் நான்கு குலத்தையும் ஏற்றுக்கொண்டதால்தான் (உதா. குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் என்ற ஆழ்வார் பாடல்) கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள், அதனால்தான் பிராமணர்கள் வலுப்பெற்றார்கள், அவர்களின் வர்ணாசிரமும் வலுப்பெற்றது என்றும் படித்தேன். பக்தி இலக்கியம் காலம் மட்டும் இல்லாமலிருந்தால், இன்று சாதி என்ற ஒன்றே இருந்திருக்காது என்றும் படித்தேன். ஒரே குழப்பமாக உள்ளது.
உங்களின் வாசிப்பு விரிவுபட்டது என்பதால் தெளிய வைப்பீர்கள் என்று நம்புகிறேன். 🙂🙏🏽

என் பதில்:
(அ) சமணம் தமிழகத்தில் இரு வகைப்படும் என்பர். தமிழ்ச் சமணம், வட சமணம் என்பன. தமிழ்ச் சமணமும் ஆசீவகமும் சம காலத்தவை. இளங்கோவடிகள் காலத்தது தமிழ்ச் சமணம் (சுமார் 2 ம் நூற்றாண்டு); நாவுக்கரசர் காலத்தது பல்லவர் காலத்தில் வந்த வட சமணம்.
(ஆ) பாலி, மைதிலி போன்ற மொழிகளின் கலப்பாக வேத பிராமணர்களால்  செயற்கையாக சமஸ்கிருதம் உருவாக்கப்பட்ருக்க வேண்டும். எனவே அது எக்காலத்தும் பேசப்பட்ட மொழியல்ல.
இனி உங்கள் கேள்விகளுக்கு :

(1) பொளத்த, சமணங்களின் வருகையால் தமிழில் பாலி மொழிக்கலப்பு இருந்தது. பாலி மொழியே சமஸ்கிருதத்தின் பெரும்பான்மையாக இருந்ததால், அது தமிழில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏதுவாயிற்று.

(2) நாவுக்கரசர் காலம் வரை கூட (7 ம் நூற்றாண்டு) தமிழ்ச் சமூகத்தில் நான்கு வர்ண சாதியம் தலைதூக்காததால், இரு வகை சமணத்திலும் சாதிகள் இல்லை எனலாம்.
(3) சைவ, வைணவ இலக்கியங்கள் தமிழுக்கு அணி சேர்த்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்  சங்க கால இலக்கியச் செல்வங்களையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் பெற்ற தமிழ், ஆழ்வார்- நாயன்மார் இன்றி அழிந்திருக்கும் என்பதை நான் ஏற்கவில்லை.
(4) சநாதனத்திற்கு எதிராகத் தோன்றிய சைவம், திருமூலர் காலத்தில் வலுவாக நின்று, பின்னர் சிறிது சிறிதாக நீர்த்துப் போய் சேக்கிழார் காலத்தில் (11-12ம் நூற்றாண்டு) வர்ணாசிரமத்தோடு சமரசம் ஆனது. காடுறை உலகத்து மேயோனாகிய மால் விஷ்ணுவினால் கபளீகரம் செய்யப்பட்ட போது, வைணவம்  வர்ணாசிரமத்தில் நின்ற அவலம் அரங்கேறியது. எனவே சைவமும் வைணவமும் இன்று சநாதனத்தின் ஊதுகுழலான வரலாறு இப்படித்தான். (5)வஞ்சகமே வாழ்வாகக் கொண்ட  பிராமணியம் தன்னை எப்படி வேண்டுமானாலும் கட்டமைக்கும். தற்காலத்தில் கூட நம்மில் எத்தனை பேரை, அதனைத் தூக்கிப் பிடிக்க வைத்துள்ளது எனபதைப் பார்த்தால் புரியும். எனவே பக்தி இலக்கிய காலம் இல்லாவிடினும் ஏதோ வகையில் பிராமணியம் தன்னை நிலைநாட்டியிருக்கும்.
   இவையனைத்தும் என் வாசிப்பிலும், தக்க சான்றோரிடம் கேட்டதிலும் விளைந்தவை.  அவ்வளவே.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

படமாடக் கோயில் ... - திருமூலர்

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி