கேள்விக்கினியை கட்கின்னாயே - புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுஆழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே !"
------புறநானூறு 167.
பாடற் குறிப்பு :
பாடியவர் : கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டவர் : ஏனாதி திருக்கிள்ளி.
ஏனாதி (சேனாதிபதி) என்பது படைத்தலைவரில் தீரச்செயல் புரிந்தோர்க்கு மன்னர்கள் அளித்த பட்டம். இவன் சோழ மன்னன் ஒருவனின் படைத்தலைவன். படைத்தலைவர்களும் குறுநில மன்னர்களாய் இருந்த காலமுண்டு. இதன் முழுப்பாடலில் கடுமான் (குதிரைவீரன்) கிள்ளி என்று போற்றப்படுவதால், சோழன் கடுமான் கிள்ளி எனவும் விளங்கப் பெற்றான்.
பாடற் பொருள் :
போரில் எதிரியைக் கண்டு அவர்தம் படை கடந்து (வென்று), படை விலக்கி எதிர் கொள்வதால், வாளினால் வாய்த்த ஆழ்ந்த தழும்புகளோடு (ஆழ் வடு), நீ காண்பதற்கு நன்றாக இல்லை (கட்கு இன்னாயே; கட்கு - கண்ணுக்கு). ஆனால் வீரம் செறிந்த புகழால், செவிக்கு இன்பம் சேர்க்கிறாய் ! (கேள்விக்கு இனியை!).
பின் குறிப்பு :
(1) அவன் காட்சிக்கு நன்றாக இல்லை எனச் சொல்லும் போது, அவனை இகழ்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் அஃது போரில் பெற்ற விழுப்புண்களால் எனும் போது, இகழ்ச்சியன்று புகழ்ச்சியே என்பது தெளிவு. எனவே ஈது இகழ்வது போலப் புகழும் வஞ்சப்புகழ்ச்சியின்பாற் பட்டது.
(2) சில பாடல்களில் சில வரிகள் நினைவில் நிற்பவை. சான்றாக, 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' எனும் கம்பநாடனின் வரியைச் சொல்லலாம். அதுபோல இலக்கிய உலகில், 'கேள்விக்கினியை கட்கின்னாயே' நினைவில் ஏற்றம் பெற்றது. இதே பொருளை முழுவதும் தராவிட்டாலும், தற்கால மொழிக்கேற்ப சற்றே நீர்த்த (diluted) வடிவத்தில், 'மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' எனலாம்.

Comments
Post a Comment