ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே - புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
------புறநானூறு 312.
பாடற் குறிப்பு :
பாடியவர் : பொன்முடியார். பெண்பாற் புலவராய் அறியப் பெறுகிறார். ஆண்மகனை வளர்ப்பதில் தம் கடமையையும், தந்தை, சமூகம், அரசன் ஆகியோர் கடமையையும், இறுதியில் அந்த ஆண்மகனின் கடமையையும் வரிசைப் படுத்துகிறார். தம் கடமை என்று அவர் கூறுவது ஒரு தாயின் கடமைக்கான குறியீடு. பிறந்து, வளர்ந்து, ஒருவன் சிறந்த மனிதனாய் உருவெடுப்பதில் அனைவர் பங்கினையும் எடுத்துக் கூறுவதன் மூலம், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டான சமூகத்தை முன் வைக்கிறார். பாடலில் கடன் என்பது கடமையைக் குறிக்கும்.
பாடற் பொருள் :
மகனைப் பெற்று, பேணி வளர்த்து, புறவுலகிற்கு அளிப்பது என் தலையாய கடமை. அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை (சான்றோன் என்பது, சங்ககாலத்திலும் சங்கமருவிய காலத்திலும், பெரும்பாலும் வீரத்திலும் அறிவுநிலையிலும் என்பர். 'அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்றவிடத்து அறிவுலகில் என்ற நிலைப்பாடு அமையக் காணலாம்). அவனுக்கு வேல் செய்து கொடுத்தல் கொல்லனின் கடமை. இங்கு வேல் என்பது கருவிக்கும், கொல்லன் என்பது சமூகத்திற்கும் ஆன குறியீடு. அஃதாவது, அவ்வாறு வளர்க்கப்பட்ட மகன் இச்சமூகத்தில் களமாட உகந்த கருவிகளை (infrastructure) அமைத்துக் கொடுத்தல் சமூகத்தின் கடமை. தனது முன்னுதாரணமான ஒழுகலாற்றின் மூலமாக அந்த இளைஞனுக்கு நல்லொழுக்கம் (நன்னடை) நல்குவது வேந்தனின் கடமை. இதனைக் காலத்திற்கேற்ப ஆள்வோரின் கடமை எனலாம். (இவற்றின் பயனாக) ஒளிபொருந்திய வாளினைப் (ஒளிறுவாள்) பெரும் போரில் (அருஞ்சமம்) சுழற்றி (முருக்கி) யானையை வென்று (களிறு எறிந்து) மீள்தல் (பெயர்தல்) அக்காளையின் (அந்த ஆண்மகனின்) கடமை. இதனைக் குறியீடாகக் கொண்டு இக்காலத்திற்கேற்ப, தீரத்துடன் அருஞ்சாதனைகள் செய்து நிற்றல் அக்காளையின் கடமை எனலாம்.

Comments
Post a Comment