கூறும் நாவே முதலாக - குழைத்த பத்து - திருவாசகம்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ".
பாடற் குறிப்பு :
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 33 ம் பகுதியான 'குழைத்த பத்து' வில் பாடல் 5 தற்போது நாம் எடுத்துள்ள பாடல்.
பாடற் பொருள் :
'அனைத்தும் நீயே' எனும் சரணாகதி நிலையில் இறைவனிடம் நிற்கும் பாடல். "சொல்லும் சொல் (கூறும் நா) முதற்கொண்டு செய்யும் செயல் (கூறுங் கரணம்) அனைத்தும் நீ ! எனது தெளிவும் (தேறும் வகை நீ), தெளியாத எனது குழப்பமும் (திகைப்பும்) நீ ! எனது தீமை, நன்மை முழுதும் நீ (எனது தீச்செயல், நற்செயல் அனைத்தையும் ஆற்றுபவன் நீ) ! உனையன்றி வேறோர் பரிசு எனக்கு இங்கு ஏதுமில்லை. மெய்ப்பொருளான உன்னை விரிவாக விளக்க முற்பட்டால், நான் தேறுவேனா ? (தேறும் வகை என்?) (அதாவது, உன்னை முழுமையாக விரித்துரைக்கும் அளவு நான் விளக்கம் பெற்றவனா?). என் சிவலோகனே ! அச்சமயத்தில் நான் திகைத்து நின்றால், நீ என்னைத் தேற்ற வேண்டாமா?"
பின் குறிப்பு :
(1) சிவபெருமானின் தோழன் என்ற நிலையில் நின்றவர் சுந்தரர் என்றாலும், மணிவாசகரும் சில இடங்களில் உரிமையோடு சிவனுடன் நட்பு பாராட்டக் காணலாம்.
எடுத்துக் காட்டு :
"எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே?"
அதுபோலவே இங்கும் "நீ தேற்ற வேண்டாமா?" எனும் உரிமை.
(2) முரண்பட்ட இரண்டு பொருள்களைச் சொல்லி அவ்விரண்டும் நீயே (அனைத்தும் நீயே) என்று இப்பாடலில் வரும் தொனியில் வைரமுத்துவின் வரிகள், தாய் குழந்தையிடம் :
"பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ"
"எனது செல்வம் நீ எனது வறுமை நீ" முதலியவை.

அருமை. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்
ReplyDelete