தேம்பாவணி - இயேசுகுமாரனின் பண்பையும் பணியையும் வளனார் எடுத்தியம்புவது

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்,
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்,
வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும்,
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அத்திருவோன்"
   --------தேம்பாவணி; பாடல் 3376.

(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது; வரி முடியும் இடத்து காற்புள்ளி தரப்பட்டுள்ளது)

பாடற் களம் :
இயேசுகுமாரனின் பண்பையும் பணியையும் வளனார் (ஜோசஃப் பெருமகனார்) எடுத்தியம்புகிறார். அவர்தம் திருக்குமாரனைப் பற்றிய கூற்று உரிமையுடன் ஒருமையில் அமைப்பது  பொருந்தி அமையும்.

பாடற் பொருள் :
நோயுற்றுத் துன்பம் அடைந்தோர்க்கு இன்பம் தரும் உயிர் மருந்துக்கு ஒப்பாவான். நெருப்பைப் போன்ற பாவச்செயல் புரிந்தோர்க்கு (புரையார்க்கு), அப்பாவங்கள் போக்குவதில் குளிர்ச்சி(சீதம்) பொருந்திய மழைக்கு (புயல்) ஒப்பாவான். தன் மனதின் இயல்பால் (வடிவத்தால்) மலருக்கு (வீ எனப்பட்டது) ஒப்பாவான். பரந்த(வியன்) கருணை(தயை) உள்ளத்தால் கடலுக்கு ஒப்பாவான். அத்திருக்குமாரன் உலகோர் அனைவருக்கும்(சகத்து எங்கும்) தாய்க்கும் தந்தை(தாதை)க்கும்  ஒப்பாவான்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்