அலியார் - பாத்திமா திருமணம் ---- சீறாப்புராணம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"பன்னரும் அலியார்க்கு இன்பப் பாத்திமா தமை நிக்காகு
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவனன்றே" -
-----சீறாப்புராணம், பாத்திமா திருமணப் படலம், பாடல் 3072.

பாடற் குறிப்பு :
நபிகள் நாயகத்தின்  திருப்புதல்வியார் பாத்திமாவின் திருமணச் சிறப்பினை இப்பாடலில் கூறுகிறார் உமறுப்புலவர்.

பாடற் பொருள் : சொல்லரும் புகழுடைய அலியார்க்கும் மகிழ்ச்சியின் வடிவான பாத்திமா தமக்கும்,  தூபா எனும் புனித மரத்தின் கீழ் இறைவனே நிக்காஹ் எனும் சிறப்பை நிகழ்த்தினார்.

பின் குறிப்பு :
மானிடரின் மங்கல நிகழ்வான திருமணத்தை இறை நிலையிலும் நிகழ்த்தி மகிழும் வழக்கம் பல்வேறு சமயங்களிலும் உண்டென அறிவோம். "பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே" என்று சம்பந்தர் காணும் திருக்கல்யாணமும், "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் !" என்று ஆண்டாள் நாச்சியார் காணும் கனாவும் நாம் கொண்டாடி மகிழ்பவையே.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்