பாவையைத் துயிலெழுப்புதல் - திருப்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                       - சுப.சோமசுந்தரம்

"கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்".
----திருப்பாவை, பாடல் 7

பாடற் குறிப்பு :
திருநாலாயிரத்தின் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) பகுதியான 'திருப்பாவை' ஆண்டாள் நாச்சியார் அருளிய முப்பது பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் இறைவனிடம் (கண்ணனிடம், திருமாலிடம்) தமக்காக நல்ல மணாளனையும், உலகோர்க்கு மழை முதலிய வளங்களையும்  வேண்டி மேற்கொள்ளும் பாவை நோன்பில் பாடுவதாய் அமைவது. குறிப்பாக இப்பாடல் கண்ணயர்ந்து துயிலும்  பாவையை அதிகாலையில் பாவை நோன்பிற்காகத் துயிலெழுப்புவது.

பாடற் பொருள் :
கீச்சு கீச்சென்று ஆனைச்சாத்தன் குருவிகள் தமக்குள் கலந்து பேசிக் கொள்ளும் பேச்சு அரவம் உனக்குக் கேட்கவில்லையோ, பேய்ப் பெண்ணே ? காசு, பிறப்பு எனும் இருவகை அணிகலன்களும்  கலகலக்கக் கை மாற்றி, (நெய் பூசிக் குழல் முடிந்தமையால்) வாசனை மிகுந்த  கூந்தலையுடைய இடையர் குல ஆய்ச்சியர் மத்தினால் ஓசையுடன் கடையும் தயிர் தளும்பும் ஒலி (தயிர் அரவம்) கேட்கவில்லையோ, நாயகியே (நாயகப் பெண்பிள்ளாய்) ! நாராயண மூர்த்தியாகிய கேசவனை அனைவரும் போற்றிப் பாடுவதைக் கேட்டும் (துயிலில்) கிடந்தாயோ,  ஒளி பொருந்தியவளே (தேசமுடையாய் - தேஜஸ் உடையவளே) ! (கதவு) திறந்திடுவாய், எம்பாவாய் !

Comments

  1. Borgata Hotel Casino & Spa - JTA Hub
    The Borgata Hotel Casino & Spa, 목포 출장샵 a luxury resort located at Renaissance Pointe in 춘천 출장안마 the heart of Atlantic 남양주 출장마사지 City, offers a night out, and a 논산 출장샵 swim 인천광역 출장안마 in the

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்