உடம்பின் மேன்மை - திருமந்திரம்
*இன்று இரு தமிழ்ப் பாடல்கள்*
"காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா" என்று சித்தர் பாடல் உடலின் நிலையாமை குறித்துப் பாடினாலும், மானிடத்திற்காக உயிர் இயங்கும் வரை உடலைப் பேணுதலின் இன்றியமையாமையை உணர்ந்து சித்தர்கள் மருத்துவம் பல சொன்னார்கள். திருமந்திரப் பாடல்களில் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருத்தலும், ஊனுடம்பு ஆலயம் என்பதும் அழியும் இந்த உடம்பின் மேன்மை பகர்வன. திருமூலர் உடம்பினை ஓம்புதலின் (பேணுதலின்) சிறப்பைக் கூறும் மேலும் இரண்டு பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன. பாடல்களின் சொற்சுவை, எளிமை கருதி தனியாக உரை தேவையில்லை என்பது அடியேன் கருத்து. ஒவ்வொரு பாடலும் அதுவே அதற்கான சிறந்த உரை :
(1) "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
(திருமந்திரம் 724)
(2) "உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
(திருமந்திரம் 725)
Comments
Post a Comment