உள்ளம் பெருங்கோயில்

 ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருத்தலைப் பேசிய உரையில் "சீவனே சிவன்" எனக் குறிக்கப்பெற்றது. இந்த சொற்பயன்பாடும் திருமந்திரத்திலிருந்தே எடுக்கப்பட்டது. அதுவே நமது இன்றைய தமிழ்ப் பாடலாய் அமையட்டுமே !


*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* :


"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் *சீவனே சிவலிங்கம்*

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே"

        (திருமந்திரம் 1823).


பாடல் விளக்கம் :

அழிந்து போகும் மனித உடலை உருவகமாக்கி அழியாப் பரம்பொருளைக் காணும் உருவக அணியே இப்பாடல். ஊனுக்குள் ஒளிந்திருக்கும் ஈசனை மேலும் வெளிக் கொணர முயல்வது.


பாடற் பொருள் :

நம் உள்ளமே கருவறை (பெருங்கோயில்). ஊனுள்ள இந்த உடம்பே கோயில். நம் வள்ளல் பெருமானுக்கு (இறைவனுக்கு - திருமூலரைப் பொருத்தமட்டில் சிவபெருமானுக்கு) கோபுர வாசல் என்பது (அவனைப் பாடிப் போற்றும்) நமது வாய் ஆகும். தெளிவான சிந்தனையுடயோர்க்கு அன்னார்தம் சீவனே (உயிரே) சிவலிங்கம். (நம்மை மயக்கும்) கள்ளப் புலன்கள் ஐந்தும் நம் இருளைப் போக்கும் (காளா) மணிவிளக்குகள் ஆவன; அஃதாவது சில சூழ்நிலைகளில் நம்மை அவை மதிமயக்கினாலும் அப்பரம்பொருளின் அருளால் நாம் தெளிவு பெறுவதால், அப்புலன்களே மணிவிளக்குகளாக உருவகிக்கப் பெறுகின்றன.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி