இன்று போய் நாளை வா
இன்று போய் நாளை வா
03-09-2026 (வியாழன்) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் உடனடியாகப் பதிலுரைக்க இயலாவிட்டால், வரும் திங்கட்கிழமை வரை சட்டமன்றத்திற்கு விடுமுறையாததால் அவர் பதில்களை நன்றாகத் தயாரித்து திங்கட்கிழமை அன்று உரைக்கலாம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவு படுத்தினார். எனவே விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனடியாக ஓட வேண்டிய அவசியமில்லாதபோதும் ஓடினார். சினிமா கதாநாயகன் பாணியில், தாம் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலிறுக்கும்போது யாரும் பயந்து அன்று சட்டமன்றத்தை விட்டு ஓடி விட வேண்டாம் என்று அதிகப் பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் கேட்டுக் கொண்டு அப்போது ஓடினார். உதயநிதி அவர்கள் விஜய்க்குக் கால அவகாசம் கொடுத்ததும் விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனே நீங்கியதும் கம்பராமாயணத்தில் "இன்று போய் நாளை வா" என்று இராவணனுக்கு இராமன் அவகாசம் கொடுத்ததையும் அன்றைய போரில் தோற்ற இராவணன் போர்க்களம் நீங்கியதையும் நினைவுறுத்தலைத் தவிர்க்க இயலவில்லை.
முதல் போரில் இராவணன் தானே களமிறங்கி ராமனை நேருக்கு நேர் எதிர்கொள்கிறான். தனது படைகளின், படைக்கலன்களின் வலுவிழந்து கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட இராவணனை நோக்கி இராமன் கூறுவது :
"ஆள்ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல்"
பொருள் : ஆளுமை உடைய தலைவனே (ஆள் ஐயா) !உனக்கு அமைந்தவை (போர்க்களத்தில் படை வலிமை) சூறாவளிக் காற்றால் (மாருதம்) சின்னாபின்னமான பூக்களைப் போல ஆனதைக் கண்டாய் (அடைந்த பூளை ஆயின கண்டனை). இன்று போய் நாளை போருக்கு வா !" என்றான் இளம் பாக்கு மரங்களின் மீது (நாகு இளம் கமுகின்) வாளை மீன்கள் தாவும் (வாழை தாவுறு) கோசல நாட்டுத் தலைவனான இராமன் (கோசல நாடுடை வள்ளல்).(நாகு என்பதன் பொருள் இளமை. 'நாகு இளம் கமுகு' என்றவிடத்து ஒரு பொருள் பல மொழியாக நாகு இளம் அமைந்தது).
பின் குறிப்பு : தற்போதுள்ள சட்டமன்ற நிகழ்வுக்கெல்லாம் கம்பனை இழுப்பது உங்களுக்கு சற்று அதிகப்படியாகத் தோன்றினால், அது உங்கள் பாடு. தற்குறிகளின் ஆட்சி நிகழும் நாடுடையவன் நான். என்னால் இப்படிதான் சிந்திக்க முடியும்.
https://www.facebook.com/share/r/1PyZEKLQdd/
Comments
Post a Comment