படமாடக் கோயில் ... - திருமூலர்
தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே". -------- திருமூலர். முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில் சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின் ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது. பாடற் பொருள் :- படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும். பின் விளக்கம் :- இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில் உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார். " நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீ...